நடிகையின் வீட்டுக்கு வெள்ளையடிக்க போன பிரபல இயக்குநர்.. அப்புறம் நடந்த கூத்து!
தமிழ் சினிமாவில் 2007ம் ஆண்டு வெளியான தண்டாயுதபாணி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே நடித்த அவருக்கு 2013ல் வெளியான குட்டிபுலி படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.

சினிமாவில் வருவதற்கு முன் வெள்ளையடிக்கும் வேலைக்கு சென்றதில் மறக்க முடியாத சம்பவம் ஒன்றை நடிகரும், இயக்குநர் சரவணன் சக்தி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஒரு நேர்காணலில் பேசிய இயக்குநர் சரவணன் சக்தி, “மறைந்த நடிகை சுஜாதா வீட்டுக்கு நான் வெள்ளையடிக்க சென்றுள்ளேன். வாசலில் நின்ற காரில் என்னுடைய உடையெல்லாம் போட்டு விட்டு வெள்ளையடிப்பதற்கு தேவையான ட்ரஸ் மாட்டிக்கொண்டு ஒவ்வொரு அறையாக சென்று வேலை செய்துக் கொண்டிருக்கிறோம். அதன்பிறகு 3 ஆண்டுகள் ஓடி விட்டது. நான் ஒரு சீரியல் இயக்கி கொண்டிருக்கிறேன். அதில் நடிப்பதற்கு சுஜாதா வந்திருந்தார்.
நான் அவரிடம் மேடம் நான் ஜோசியம் நல்லா பார்ப்பேன் என சொன்னேன். உங்க கை காட்டுங்க நான் சொல்றேன். சுஜாதாவும் கையை காட்ட உங்களுக்கு ஆண் ஒன்று, பெண் ஒன்று என இரண்டு பசங்க இருக்கிறார்கள். அவருக்கோ நான் சொல்வதைக் கேட்டு பயங்கர ஆச்சரியம். என்ன கைரேகை பார்த்து துல்லியமா சொல்கிறாரே என ஷாக்கானார். உங்க கணவர் ஒரு காரமான தொழில் செய்வாரே என சொல்ல அவர் அதிர்ச்சியானார்.
எனக்கு சுஜாதாவின் கணவர் வெளிநாட்டிற்கு ஊறுகாய் ஏற்றுமதி செய்பவர் என்பது முன்னரே தெரியும். உடனே நம்முடைய இயக்குநர் பயங்கரமா ஜோசியம் சொல்கிறார் என செட்டில் இருந்த அனைவரிடமும் கூறி விடுகிறார். இப்படியே ஒரு 4 நாட்கள் ஓடி விட்டது. கடைசியில் உங்க நடு வீட்டில் ஒரு விளக்கு தொங்குகிறது உண்மைதானே என சொன்னதில் பொய் உடைந்து விட்டது. அதன்பிறகு உங்கள் வீட்டில் ஒரு வாரம் வந்து வெள்ளையடித்தேன் என நான் நடந்ததை சொன்னேன்” என வேடிக்கையான பகிர்ந்து கொண்டார்.
இயக்குநர் சரவணன் சக்தி
தமிழ் சினிமாவில் 2007ம் ஆண்டு வெளியான தண்டாயுதபாணி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சரவண சக்தி. சினிமாவிற்காக தனது பெயரை ராஜ் சேதுபதி என வைத்துக் கொண்டார். தொடர்ந்து நாயகன், பில்லா பாண்டி, சந்தர்ப்பம், குலசாமி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தனது முதல் படத்திலேயே சிறிய வேடத்தில் நடித்த அவருக்கு 2013ம் ஆண்டு வெளியான குட்டி புலி படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. அதன்பிறகு தர்மதுரை, கொடிவீரன், கண்ணே கலைமானே, சண்டக்கோழி 2, தேவராட்டம், அடுத்த சாட்டை, மிக மிக அவசரம், க.பெ. ரணசிங்கம், ஈஸ்வரன், இரண்டாம் குத்து, ராஜ வம்சம், மாமனிதன், சாமானியன் என பல பேர் சொல்லும் படங்களில் சிறப்பான கேரக்டரில் நடித்துள்ளார்.





















