Pa Ranjith Dance: மார்கழியில் மக்களிசையில் குத்தாட்டம் போட்டு அசத்திய பா.ரஞ்சித்: வைரலாகும் வீடியோ
மார்கழி மக்களிசை நிகழ்ச்சியில் இயக்குநர் பா ரஞ்சித் நடனமாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது
மார்கழியில் மக்கள் இசை
இயக்குநர் பா ரஞ்சித் தொடர்ச்சியாக பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார். தலித் மக்களின் வாழ்க்கை , கலாச்சாரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் திரைப்படத் திருவிழா, இசை நிகழ்ச்சி என ஒவ்வொரு வருடமும் பல்வேறு நிகழ்ச்சிகள் சென்னை மற்றும் பிற மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிகழ்ச்சி மார்கழியில் மக்களிசை. மார்கழி மாதம் என்றாலே பொதுவாக கர்னாடக சங்கீதம் என்கிற நிலை மாறி நாட்டுப்புற இசை, பறை இசை, ராப் இசை என பல்வேறு இசை வகைமைகளை ஒரே இடத்தில் இந்த நிகழ்ச்சியில் பார்க்கலாம்.
பல்வேறு நலிந்து வரும் இசைக் கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கெளரவிக்கப்பட்டும் வருகிறார்கள். பல்வேறு தரப்பு ரசிகர்களின் பங்களிப்புடன் வெற்றிகரமாக மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி, நான்காவது முறையாக இந்த ஆண்டும் நடைபெற்று வருகிறது.
குத்தாட்டம் போட்ட பா ரஞ்சித்
இந்த ஆண்டு மார்கழி மக்களிசை மொத்தம் 5 நாட்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 23 மற்றும் 24 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் கோலார் தங்க வயலில் ஒரு நாளும் ஓசூரில் ஒரு நாளுடம் நடைபெற்றது. மீதம் இருக்கும் மூன்று நாட்கள் சென்னையில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் கலந்துகொள்கிறார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் மக்கள் இலவசமாக சென்று வரலாம் என்பது குறிப்பிடத் தக்கது.
View this post on Instagram
வருடாவரும் இந்த நிகழ்ச்சியில் இசைக் கலைஞர்களுடன் ரசிகர்களும் திரை உலகினரும் நடனமாடி கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கடந்த ஆண்டுகளில் பா ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் ஆகிய இருவரும் இணைந்து நடனமாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகின. கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியின் காணொலிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது . இயக்குநர் பா ரஞ்சித் குத்தாட்டம் போட்டு ஆடி மகிழும் வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
தங்கலான்
விக்ரம் , பார்வதி திருவோது, மாளவிகா மோகணன் உள்ளிட்டவர்கள் நடித்து பா. ரஞ்சித் இயக்கியிருக்கும் திரைப்படம் தங்கலான். ஸ்டுடியோ க்ரீன் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகிய தங்கலான் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.