மேலும் அறிய

இயக்குநர் பா.ரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் கூட்டணி முடிவுக்கு வருகிறதா?

தமிழ் சினிமாவின் வெற்றிக்கூட்டணியான இயக்குனர் பா.ரஞ்சித் - இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூட்டணி பிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா.ரஞ்சித். அதேபோல, தமிழ் திரையுலகின் இன்று அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் பாடல்களை உருவாக்கும் இசையமைப்பாளராக வலம் வருபவர் சந்தோஷ் நாராயணன். இவர்கள் இருவரும் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலமாகவே தமிழ் திரையுலகில் அறிமுகமானர்.

சந்தோஷ் நாராயணனின் மகள் தீ பிரபல ராப் பாடகர் தெருக்குரல் அறிவுடன் இணைந்து சமீபத்தில் எஞ்சாய், எஞ்சாமி என்ற பாடலை எழுதி பாடி வெளியிட்டனர். தமிழில் முதன்முதலில் வேறு எந்த ஆல்பம் பாடலும் பெறாத வரவேற்பை இந்த பாடல் பெற்றது. யூ டியூப்பிலும் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பெரும் வரவேற்பை பெற்றது.


இயக்குநர் பா.ரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் கூட்டணி முடிவுக்கு வருகிறதா?

இந்த நிலையில், சமீபத்தில் எஞ்சாய், எஞ்சாமி பாடலின் வெற்றிக்காக வெளியிடப்பட்ட விளம்பரத்தில் சந்தோஷ் நாராயணனின் மகள் தீ-க்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்தது. அந்த பாடலின் வெற்றியில் தீயின் அளவிற்கு சம பங்காற்றிய அறிவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாதது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திட்டமிட்டே அறிவை இந்த விளம்பரத்தில் ஓரங்கட்டியதாக தகவல்களும் வெளியானது.

இதையடுத்து, உடனடியாக இயக்குனர் ரஞ்சித் இந்த செயலுக்கு தனது கண்டனத்தை டுவிட்டரில் பதிவிட்டார். தெருக்குரல் அறிவு இயக்குனர் ரஞ்சித்தின் கேஸ்ட்லஸ் கலெக்டிவ்-விலும், நீலம் பண்பாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பாடல்களை எழுதி பாடி வருபவர். இயக்குனர் ரஞ்சித் வெளிப்படையாக தனது கண்டனத்தை பதிவு செய்தது சந்தோஷ் நாராயணனுக்கும், அவருக்கும் மோதல் போக்கை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக, பா.ரஞ்சித் முழுக்க முழுக்க உருவாக்கி வரும் காதல் திரைப்படமான “நட்சத்திரங்கள் நகர்கிறது” படத்திற்கு புதிய இசையமைப்பாளர் பணிபுரிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எஞ்சாயி எஞ்சாமி பாடல் வெற்றி விளம்பரத்தில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இயக்குநர் பா.ரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் கூட்டணி முடிவுக்கு வருகிறதா?

அதேசமயத்தில், இயக்குனர் பா.ரஞ்சித் முழுக்க முழுக்க புதிய கலைஞர்களுடன் பணியாற்றுவதன் காரணமாகவே இந்த படத்திற்கும் புதிய இசையமைப்பாளருடன் பணியாற்ற பா.ரஞ்சித் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் ஆஸ்தான வெற்றிக்கூட்டணியான பா.ரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் பிரிந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, சந்தோஷ் நாராயணன் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் கோலோச்சி வருகிறார். கானா இசை, மேற்கத்திய இசை, மெல்லிசை என அவர் படங்களுக்கு படங்களுக்கு தனது இசையிலும், பாட்டிலும், பின்னணி இசையிலும் காட்டும் புதுமை அவருக்கு ஏராளமான ரசிகர்களை உருவாக்கித் தந்துள்ளது.

இயக்குனர் ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படம் மட்டுமின்றி மெட்ராஸ், கபாலி, காலா மற்றும் சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை ஆகிய 5 படங்களுக்கும் சந்தோஷ் நாராயணனே இசையமைத்திருந்தார்.

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
Embed widget