மேலும் அறிய

ஏசி ரூம்ல உட்கார்ந்து பேசாதீங்க..அப்பா மகளை வெளுத்து வாங்கிய மோகன் ஜி

திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தைப் பெற்றுக்கொள்வது குறித்த நடிகர் சத்யராஜ் மற்றும் அவரது மகளின் கருத்தை விமர்சித்து இயக்குநர் மோகன் ஜி வீடியோ வெளியிட்டுள்ளார்

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் அண்மையில் திருமணமின்றி குழந்தைப் பெற்றுக்கொள்வதை தான் ஆதரிப்பதாக பேசியது சர்ச்சைப் பொருளாக மாறியுள்ளது. தனது மகளின் கருத்தை ஆதரித்து நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றும் வெளியிட்டிருந்தார். சத்யராஜ் மற்றும் அவரது மகளின் கருத்தை விமர்சித்து திரெளபதி பட இயக்குநர் தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார். 

பேட்டி ஒன்றில் பேசிய திவ்யா சத்யராஜ்  தனக்கு தாலி கட்டி , மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொள்வது போன்ற எந்த சடங்குகளின் மீதும் நம்பிக்கை இல்லை என்றும் , ஒருவர் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினால் அவர் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயமில்லை. திருமணம் செய்யாமல் விருப்பமுள்ளவர்கள் குழந்தைப்பெற்றுக் கொள்ளலாம். என பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் சத்யராஜ் வெளியிட்ட வீடியோவில்  "திருமணமே செய்துகொள்ளாமல் ஒரு நபர் குழந்தைப் பெற்றுக்கொள்ள விரும்பினால் கூட இன்ற மருத்துவ துறை வளர்ச்சியில் அதற்கான சாத்தியம் இருக்கிறது. அப்படி இருக்கையில் இது முழுக்க முழுக்க ஒரு தனி நபரின் விருப்பம். அந்த வகையில் என்னுடைய மகள் திவ்யாவின் கருத்தோடு நான் ஒத்துப் போகிறேன். " என கூறியிருந்தார்

மோகன் ஜி கண்டனம் 

சமீபத்தில் திவ்யா சத்யராஜ் அவர்கள் பேசிய காணொளி விமர்சிக்கப்பட்டும் சிலரால் ஆதரிக்கப்பட்டும் வருகிறது. அவர் பேசியது குறந்த பேருக்கு போய் சேர்ந்திருக்கும் என்பதால் அது ஒரு பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் அதை ஆதரித்து சத்யராஜ் சார் பேசுனது முக்கியனா விஷயமா பார்க்கப்படுகிறது. அவர் சொன்ன கருத்து எளிதாக ஒரு கோடி பேருக்கு போ சேர்ந்திருக்கும். சார் நீங்கள் ஒரு பெரியாரிஸ்ட் என்பது 90ஸ் கிட்ஸ்களுக்கு போய் சேர்ந்திருக்கும். பெரியாரியம் என்றால் என்னவென்று கூட இந்த தலைமுறையினருக்கு தெரியாது. அதனால் நீங்களும் திவ்யாவும் பேசியது தவறு. திருமணம் செய்யாமல் , தாலி கட்டாமல் , பெற்றோர்களின் சம்பந்தம் இல்லாமல் பிடித்தவருடன் சேர்ந்து வாழ்வது தப்பில்லை என்று நீங்கள் சொன்னீர்கள். இதைத் தாண்டி யாருமே இல்லாமல் அறிவியல் முறைப்படி குழந்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்கிற அபத்தமான கருத்தை சொன்னீர்கள்.

ஏசி ரூமில் உட்கார்ந்து பேசாதீர்கள்

வங்கியில் குறந்தது 25 கோடி வைத்திருக்கும் உங்களால் இந்த மாதிரி குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். எந்த வித ஆதரவும் இல்லாமல் மூன்று நான்கு வேலைக்கு ஆள் வைத்து நீங்கள் அந்த குழந்தை வளர்த்திடுவீர்கள். முறைப்படி சொந்தங்களை கூப்பிட்டு கல்யாணம் செய்துகொள்பவர்களே அத்தனை பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். ஆனால் நீங்கள் சொல்வதைக் கேட்டு சாமானிய மக்களால் செய்ய முடியாது. நீங்கள் சொல்வதைக் கேட்டு ஒரு பெண் திருமணன் செய்துகொள்ளாமல் அவருடன் ஒரு குழந்தைப் பெற்றுக் கொண்டால் பாதிக்கப்படப் போவது அந்த பெண் தான் . அந்த ஆண் அந்த பெண்ணை ஏமாற்றிவிட்டால் அந்த பெண் தனியாக எப்படி அந்த குழந்தையை வளர்ப்பார். ஒரு மாச சம்பளத்தை வைத்துக் கொண்டு சிங்கிள் பேரண்டாக இருந்துக்கொண்டு ஒரு குழந்தையை வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் என்று கேட்டு பாருங்கள் தெரியும். நாலுக்கு நால் ஏசி ரூமில் உட்கார்ந்துக் கொண்டு செல்வந்தராக வாழ்ந்துக்கொண்டு இந்த கருத்தை சொல்வது ரொம்ப ஈஸிதான். திவ்யா சத்யராஜ் மற்றும் சத்யராஜ் ஆகியோர் சொன்ன இந்த கருத்து ரொம்ப தவறானது. 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு பிறந்த பெண் குழந்தைகள் இந்த கருத்தை கேட்டு தவறான முடிவுகள் எதுவும் எடுக்காதீங்க. "என மோகன் ஜி பேசியுள்ளார் 

தலைப்பு செய்திகள்

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!
Suriya: அப்பா சிவகுமாருக்கு தெரியாமல் அம்மா வாங்கிய கடன்.. சூர்யா நடிக்க வந்த கதை தெரியுமா?
Suriya: அப்பா சிவகுமாருக்கு தெரியாமல் அம்மா வாங்கிய கடன்.. சூர்யா நடிக்க வந்த கதை தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Embed widget