மேலும் அறிய

Mari Selvaraj : “நான் நாடகக்காதல் திருமணம்தான் செய்திருக்கிறேன்; ஆனால்...” - மனைவி குறித்து பேசிய மாரி செல்வராஜ்

சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்வதை நாடக காதல் என்று சொல்லும் தரப்பிற்கு இயக்குநர் மாரி செல்வராஜ் கொடுத்த பதில் இதுதான்

வாழை

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை படத்தின் முதல் பாடல் வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மாரி செல்வராஜின் மனைவி திவ்யா செல்வராஜ் நவ்வி ஸ்டுடியோஸ் சார்பாக இப்படத்தை தயாரித்துள்ளார். ஹாட்ஸ்டார் இப்படத்தை வெளியிடுகிறது. முழுமுழுக்க குழந்தைகளை மையப் படுத்தி உருவாகியிருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. வாழை படத்தின் முதல் பாடல் வெளியீட்டு பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ் மேடையில் மிகவும் உருக்கமாக பேசினார். தான் காதலித்து திருமணம் செய்துகொண்ட தனது மனைவி திவ்யா  மாரி செல்வராஜ் பெயரில் இந்த படத்தை தயாரித்துள்ளது குறித்து அவர் பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

 நான் நாடக காதல் தான் செய்துகொண்டேன்

"இந்த படத்தை என்னுடைய மனைவியான திவ்யா மாரி செல்வராஜ் பெயரில் வெளியிடுகிறேன். நான் ராம் சாரிடம் உதவி இயக்குநராக இருந்தபோது நானும் திவ்யாவும் 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படம் பார்க்க சென்றிருந்தோம். அப்போது தான் தங்கமீன்கள் படமும் வெளியாகி இருந்தது. படம் போட்ட கொஞ்ச நேரத்திலேயே ராம் சார் எனக்கு ஃபோன் செய்து ஒரு புத்தகம் வேண்டும் அதை உடனே வாங்கி வரச் சொன்னார். நானும் படத்தில் இருந்து வெளியே வந்து அந்த புத்தகத்தை வாங்கி படித்துவிட்டு திரையரங்க வாசலில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டு இருந்தோம். பொதுவாக உதவி இயக்குநராக இருக்கிறோம் என்றாலே ஏதாவது ஒரு படத்திற்கு ஊரில் இருந்து டிக்கெட் கேட்பார்கள். அதேபோல் தான் திவ்யாவும். நான் வேலை பார்த்தது என்னவோ தங்கமீன்கள் மாதிரியான படங்களில். ஆனால் அவர் எந்திரன் மாதிரியான  படத்திற்கு டிக்கெட் கேட்பார். நானும் அடித்து பிடித்து வாங்கிக் கொடுத்து விடுவேன். திவ்யாவின் வீட்டில் இருந்த அனைவரும் ஏதோ ஒரு வகையில் படங்கள் அல்லது கலை வழியான உரையாடக் கூடியவர்களை நிறைய மதிப்பவர்களாக இருந்தார்கள். அது என்னிடம் ஏராளமாக இருந்ததால் நான் அவர்களுக்கு நெருக்கமானவனாக மாறினேன். என் வாழ்க்கையில் நான் மீள முடியாத ஒரு கதை தான் வாழை. அப்படியான ஒரு படத்தை அவள் பேரில் தயாரிப்பது என் குழந்தைகளும் எனக்கு அடுத்து வரக் கூடியவர்கள் என்னை புரிந்துகொள்ள சரியான வழியாக இருக்கும் என்று நம்புகிறேன். சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களை நாடகக் காதல் என்று சொல்கிறார்கள். அப்படி பார்த்தால் நாடகக் காதல் செய்த நான் என் மனைவி பேரில் ஒரு படத்தை தயாரித்திருக்கிறேன் என்று நினைக்கும் போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது" என்று மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget