அலைபாயுதே படத்தில் ஷாருக் கான் நடிக்க வேண்டியதா..அந்த ஒரு காரணத்தை சொன்ன மணிரத்னம்
அலைபாயுதே படத்தை ஷாருக் கான் மற்றும் கஜோல் வைத்து இயக்கவிருந்ததாகவும் ஆனால் அந்த படத்தின். முக்கியமான ஒரு அம்சத்தை அப்போது தான் எழுதவில்லை என்று மணிரத்னம் தெரிவித்துள்ளார்

மணிரத்னம்
இந்திய சினிமாவின் தனித்த அடையாளமாக திகழ்பவர் மணிரத்னம். மெளன ராகம் , நாயகன் , அக்னி நட்சத்திரம் , அஞ்சலி , தளபதி , என மணிரத்னம் இயக்கிய பெரும்பாலான படங்கள் இன்று கிளாசிக் அந்தஸ்த்தை பெற்றுள்ளன. அந்த வகையில் எல்லா தலைமுறை காதலர்களுக்கு மத்தியிலும் கிளாசிக் படமாக இருந்து வருகிறது அலைபாயுதே. இப்படத்தில் நடித்த ஷாலினி மாதவன் இருவருக்கும் கரியரில் திருப்புமுனையாக இந்த படம் அமைந்தது. இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் படம் பற்றிய ஒரு தகவலை மணிரத்னம் தெரிவித்துள்ளார்
அலைபாயுதே படத்தின் ஷாருக் கான் கஜோல்
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மணிரத்னம் அலைபாயுதே படத்தில் முதலில் ஷாருக் கான் மற்றும் கஜோலை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்ததாக மணிரத்னம் தெரிவித்துள்ளார். ஆனால் அப்போது இப்படத்தின் கதையை தான் முழுமையாக எழுதவில்லை என்பதால் இந்த உயிரே படத்தை இயக்கியதாக அவர் தெரிவித்துள்ளார் " அலைபாயுதே படத்தின் மொத்த கதையும் ஒரு நாளில் தொடங்கி பிளாஷ்பேக் சென்று பின் அதே நாளில் முடியும் . ஷாருக் கானிடம் இந்த கதையை சொன்னபோது இந்த ஒரு அம்சம்த்தை மட்டும் நான் யோசிக்கவில்லை. இந்த கதையை எப்படி தொடங்கி எப்படி முடிக்க வேண்டும் என்பது தெரியாததால் உயிரே படத்தை இயக்கினேன்" என மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
Exclusive: Mani Ratnam - "What I had planned to do with Shah Rukh Khan was 'Alai Payuthey'. I wanted to do it with Shah Rukh and Kajol and I told him the story and he agreed. But I had not cracked the last element of the story."#ShahRukhKhan pic.twitter.com/AdUrPnRNZJ
— ℣ (@Vamp_Combatant) January 27, 2025
தக் லைஃப்
தற்போது மணிரத்னம் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் படத்தை இயக்கியுள்ளார். த்ரிஷா , சிலம்பரசன் , அசோக் செல்வன் , அபிராமி , ஜோஜூ ஜார்ஜ் , ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.





















