மேலும் அறிய

கூலி அதர பழசு கேங்ஸ்டர் கதை.. தளபதி ரேஞ்சில் பில்டப் வேற.. லோகேஷ் சம்பளம் எவ்வளவு தெரியுமா!

கூலி திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே படத்தின் கதை இதுதான் என சமூகவலைதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் அடுத்தடுத்து படங்களை லைன் அப்பில் வைத்துள்ளார். தற்போது அவர் நடித்துள்ள கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது. லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்படம் நாளொரு வண்ணம் கூலி படம் குறித்த செய்திகள் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கூலி படத்தின் கதை லீக் ஆகியிருப்பதாகவும், இதுதான் கதையா என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

 கூலி படம் மாஸ் ஹிட் ஆகுமா?

குறிப்பாக சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கு தான் புரோமோஷன் தேவை என பரவலாக பேசப்படுவது உண்டு. ஸ்டார் படங்களுக்கு அது தேவையில்லை என்றும் குறிப்பிடுவார்கள். ஆனால், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் ரிலீஸ் ஆக ஒரு மாதம் இருக்கும் நிலையில, கூலி படத்திற்கான புரோமோஷனை இப்போதே தொடங்கிவிட்டார். சமீபத்தில் கூலி படம் தொடர்பாக அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்திருந்தார். இதில், கூலி படத்தின் டிரைலர் தேதியையும் குறிப்பிட்டார். மேலும், கைதி 2, அமீர்கான் படம் என லோகேஷ் கனகராஜூம் லைன் அப்பில் வைத்திருக்கிறார். 

50 கோடி சம்பளம் 

கூலி படத்திற்காக தான் வாங்கிய சம்பளம் குறித்தும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார். லியோ திரைப்படம் 600 கோடி வசூல் செய்ததால் கூலி திரைப்படத்தில் நான் 50 கோடி சம்பளம் வாங்க முடிந்தது. லியோ படத்தை விட கூலி படத்தில் 2 மடங்கு அதிக சம்பளம் என்றும் தெரிவித்துள்ளார். அதே சமயம் டப்பிங் ஸ்டுடியோவில் படத்தை பார்த்த ரஜினி சாருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. டப்பிங் பேசி முடித்துவிட்டு என்னை கட்டியணைத்து எனக்கு இன்னொரு தளபதியை கொடுத்திருக்கிறீர்கள் என்று ரஜினி கூறியதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.  இந்த தகவலால் ரசிகர்களுக்கு கூலி படத்தின் மீது அதிக நம்பிக்கை வந்திருக்கிறதாம். 

கூலி படத்தின் கதை இதுதானா?

ரஜினி - லோகேஷ் காம்போ ஒரு பக்கம் அனிருத் இசை,  மோனிகா பாடல் மல்டிஸ்டார்கள் நிறைந்திருக்கும் படமாக கூலி இருக்கிறது. பான் இந்திய அளவில் வெளியாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்நிலையில், படத்தின் கதை குறித்து பரவலாக பேசப்படுவதால் ரசிகர்கள் அப்செட்டில் இருக்கின்றனர். அதாவது, கூலி படத்தில் பெரிய கேங்ஸ்டராக இருக்கும் ரஜினிகாந்த் அவர் செய்த தவறுகளை சரி செய்ய முயற்சிக்கிறாராம். அதற்காக தனது எதிரிகளை பழிவாங்கிவிட்டு பிறகு புதிய வாழ்க்கையை தொடங்குவதாக பேசப்படுகிறது. கதை அதர பழசாக இருக்கிறது. இதற்குத்தான் 600 கோடி பட்ஜெட் படமா என்றும் கலாய்க்க தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள். 

மேக்கிங்கில் மிரட்டுவாரா லோகேஷ்?

கதையே இல்லாதது போல வழக்கமான கேங்ஸ்டர் கதை. ரஜினிக்கு ஏற்ற பின்னணி இசை இதை வைத்து தான் ஆயிரம் கோடி அடிக்கும் என கூறுகிறார்களோ என்றும் லோகேஷ் கனகராஜ் மேக்கிங்கில் மிரட்டி விடுவார். கமலுக்கு விக்ரம் போன்று ரஜினிக்கு கூலி இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். படத்திற்கான ஹைப் ஒரு பக்கம் இருந்தாலும், சிலர் கதை லீக் ஆனதை வைத்து ரோஸ்ட் செய்ய தொடங்கிவிட்டனர். இயக்குநர் லோகேஷ் எப்போது கேங்ஸ்டர், போதை கடத்தல், தங்கம் கடத்தலை விட்டு நல்ல கதைக்கு வருவார் என்று தெரியவில்லை என கிசுகிசுக்க தொடங்கிவிட்டனர். கூலி படத்தையும் பங்கமாய் கலாய்க்க தொடங்கியுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Embed widget