குஷ்பூ டெடிகேஷன் வேற லெவல்.. 36 மணி நேர ஷூட்டிங்.. நினைவுகளைப் பகிர்ந்த கஸ்தூரி ராஜா!
ஒரு குறிப்பிட்ட தொகை பாக்கி இருக்கும் நிலையில் குஷ்பூ வெளிநாட்டிற்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். அவ்வாறு சென்றால் திரும்பி வர 2 மாதங்களாகும் என சொன்னார்.

நடிகை குஷ்பூ தனது நாட்டுப்புற பாட்டு படத்தின் ஷூட்டிங்கில் இடைவிடாமல் நடித்த சம்பவத்தை இயக்குநரும், தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார். அதனைப் பற்றிக் காணலாம்.
ஒரு நேர்காணலில் பேசிய கஸ்தூரிராஜா நான் நாட்டுப்புற பாட்டு படத்தில் இடம்பெற்ற புகழ் வாய்ந்த ஒத்த ரூவா தாரேன் பாடல் எடுக்கும்போது குஷ்புவுக்கு நான் பணம் கொடுக்கவில்லை. நாங்கள் இருவரும் இணைந்த முதல் படம் அதுவாகும்.அதில் குறைந்த சம்பளத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டார். ஒரு குறிப்பிட்ட தொகை பாக்கி இருக்கும் நிலையில் குஷ்பூ வெளிநாட்டிற்கு செல்ல திட்டமிட்டு இருந்தார்.
அவ்வாறு சென்றால் திரும்பி வர இரண்டு,மூன்று மாதங்களாகும் என்பதால் அவர் என்னிடம் எப்படியாவது அந்தப் பாடலை முடித்து விடுங்கள் என கேட்கிறார். நான் அதற்கு இல்லமா என்னால் இரண்டில் ஒன்றுதான் செய்ய முடியும். அதாவது ஒன்று ஷூட்டிங்கை முடிக்க முடியும் அல்லது உங்களுக்கு பணம் கொடுக்க முடியும் என தெரிவித்தேன். அதற்கு குஷ்பு நான் உங்களிடம் பணம் கேட்கவே இல்லையே.. நீங்க படத்த உடனே முடிங்க என கூறினார்.
இதனைத் தொடர்ந்து பூந்தமல்லி அருகே வசித்து வந்த கோவை ஞானம் என்பவரை சந்தித்து விஷயத்தை சொன்னேன். அவர் யாரு என்னவென்று கேட்காமல் ரூபாய் ஒரு லட்சம் பணம் கொடுத்தார். அவர் வீட்டு வாசலிலேயே பந்தலை போட்டு ஷூட்டிங்கை தொடங்கினேன். ஒத்த ரூபா தாரேன் பாடலுக்கு தொடர்ந்து 36 மணி நேரம் இடைவிடாமல் ஷூட்டிங் முடித்து கொடுத்தார். அப்பாடலில் குஷ்பூ தலையில் கரகம் வைத்துக் கொண்டு ஆடுவார். அப்போது அதனை கட்டுவதற்கு இரும்பு கம்பி போட்டு தலைமுடியோடு கட்டி வைப்பார்கள். அதோடு உட்கார்ந்து கொண்டு அவருடைய உதவியாளர் மடியில் தூங்கிக் கொண்டு இரவு பகல் பாராமல் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு தான் குஷ்பூ சென்றார்” என தெரிவித்திருந்தார்.
நாட்டுப்புற பாட்டு படம்
1996ம் ஆண்டு கஸ்தூரி ராஜா எழுதி கஸ்தூரி ராஜா எழுதி இயக்கிய நாட்டுப்புற பாட்டு படத்தில் சிவகுமார், குஷ்பூ, செல்வா, மனோரமா, கவுண்டமணி, செந்தில், வினு சக்கரவர்த்தி, குமரி முத்து, அனுஷா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ஒத்த ரூபா தாரேன் பாடல் பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளிலும், கிராமத்து திருவிழாவிலும் தவறாமல் இடம் பெறும் அளவுக்கு புகழ்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.





















