மேலும் அறிய

Jason Sanjay: விஜய் இடத்தை பிடிக்க பிளான்?.. ஜேசன் சஞ்சயின் மாஸ்டர் பிளான்.. ரசிகர்கள் ஆச்சர்யம்!

நான் சினிமாவுக்குள் நுழைவது குறித்து எனது பெற்றோர், சகோதரி மற்றும் நண்பர்களிடம் பேசினேன். அவர்கள் அனைவரும் மிகவும் நேர்மறையாக பேசி எனக்கு மிகுந்த ஊக்கமளித்தனர் என ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

நான் சினிமாவுக்குள் நுழைவது பற்றி பேசியபோது என் குடும்பத்தினர் மிகப்பெரிய அளவில் ஆதரவு கொடுத்ததாக இயக்குநர் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். 

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் பேரனும், முதலமைச்சர் ஜோசப் விஜயின் மகனுமான ஜேசன் சஞ்சய் “சிக்மா” என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ளார்.  ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படம் ஜூலை 31ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது விஜயின் ஜனநாயகன் படம் ஜூலை 23ம் தேதி ரிலீசாவதால் ரிலீஸ் தேதி மாற்றப்படவுள்ளது. 

இப்படியான நிலையில் ஊடகம் ஒன்றிற்கு ஜேசன் சஞ்சய் நேர்காணல் அளித்துள்ளார். அதில் பேசிய அவர், “ அடிப்படையில் நான் ஒரு திரைப்படக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அதனால் மிகச் சிறு வயதிலிருந்தே படப்பிடிப்புத் தளங்களுக்குச் செல்வது வழக்கம். நான் பல திரைப்படங்களை பிரீமியர் காட்சிகளில் பார்த்திருக்கிறேன். மேலும் திரைப்படங்களைப் பார்ப்பது எப்போதுமே எனது மிகப்பெரிய பொழுதுபோக்காக இருந்து வருகிறது.

நான் சினிமாவுக்குள் நுழைவது குறித்து எனது பெற்றோர், சகோதரி மற்றும் நண்பர்களிடம் பேசினேன். அவர்கள் அனைவரும் மிகவும் நேர்மறையாக பேசி எனக்கு மிகுந்த ஊக்கமளித்தனர். அப்போதுதான் அவர்கள் என் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதை நான் உண்மையாக உணர்ந்தேன். அதேசமயம் சிக்மா படப்பிடிப்பு தொடங்கியபோது, ​​விஜய்சேதுபதி மற்றும்  சூரி ஆகியோரும் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர் என கூறியுள்ளார்.

Also Read: பெண் தோழிகளுக்காக ரயிலில் சண்டை போட்ட முதல்வர் விஜய்.. நினைவுகளைப் பகிர்ந்த சஞ்சீவ்!

தொடர்ந்து பேசிய ஜேசன் சஞ்சய், “உலகம் முழுவதும் வெளியாகும் எல்லா வகை திரைப்படங்களையும் நான் பார்த்து ரசிப்பேன். நான் ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போது அதன் கதை சொல்லப்படும் விதம் அது எங்கிருந்து தொடங்கி முடிகிறது, எப்படி விவரிக்கப்படுகிறது என்பவற்றை மிகவும் கவனமாகக் கவனிப்பேன். அது ஒரு புதிரை விடுவிப்பது போன்ற உணர்வைத் தரும். ஒரு  படத்தைப் பார்த்த பிறகு அதைப் பார்க்காத என் நண்பர்களிடம் கதையை உற்சாகமாக விவரிப்பேன். அநேகமாக அங்கிருந்துதான் கதை சொல்லும் என் ஆர்வம் தொடங்கியது என நினைக்கிறேன். 

நான் இயக்குநராக முடிவு செய்த என் வயதைக் கருத்தில் கொண்டு, நான் ஒரு காதல் கதையைத்தான் உருவாக்குவேன் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், இரண்டு பேரை மையமாகக் கொண்ட ஒரு காதல் கதையை உருவாக்குவதற்குப் பதிலாக, ஒரு கும்பலை மையமாகக் கொண்ட கேங்ஸ்டர் படத்தை எடுக்க நினைத்தி சிக்மாவை உருவாக்கியுள்ளேன். 

பிரேமம் படத்தின் இயக்குனர்  அல்போன்ஸ்புத்ரன்  என்னை அவரது படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க அணுகினார். ​​எனக்கு சுமார் 20 வயது தான் ஆகியிருந்தது.  நான் படித்துக் கொண்டிருந்ததால்  அதனை மையமாகக் கொண்ட ஒரு கதையை எழுதியிருந்தார் என்று நினைக்கிறேன். அந்த நேரத்தில், சினிமாவில் நுழையும் எண்ணம் எனக்கு இல்லை. எனக்கு எது நன்றாக வரும் என்பதைக் கண்டறியும் முயற்சியில் நான் இருந்தேன். அதனால் அந்த வாய்ப்பை ஏற்கவில்லை. மேலும் அவரின் கதையை முழுவதும் கேட்ட பிறகு நான் ஒப்புக்கொள்ளவில்லை என்பது சரியாக இருக்காது. இருந்தாலும் தன் படத்துக்கு என்னை நினைத்ததை நான் உண்மையாகவே பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன். சிக்மா ரிலீசான பிறகு நடிப்பு பற்றி யோசிப்பேன் என ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். 

இதனைக் கண்ட ரசிகர்கள் அப்பாவின் இடத்தை படிப்படியாக பிடிக்க இப்போது இருந்தே ஜேசன் சஞ்சய் திட்டமிட்டு வருகிறாரா என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சிக்மா படம் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget