மேலும் அறிய
படம் பார்க்க தியேட்டர் வாங்க... வீதி வீதியாக சென்று அழைப்பு விடுத்த பிரபல இயக்குனர் - யார் நடித்த படம் தெரியுமா ?
இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த "ரத்னம்" திரைப்படம் வருகிற 26 ஆம் தேதி நாடு முழுவதும் வெளியாக உள்ளது.

ரத்னம் திரைப்படம் - பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த இயக்குனர் ஹரி
புதுச்சேரி: திரைப்பட இயக்குனர் ஹரி புதுச்சேரி நகரப்பகுதியில் வீதி வீதியாக சென்று 26-ம் தேதி வெளியாகியுள்ள "ரத்னம்" rathnam movie திரைப்படம் பார்க்க அனைவரும் தியேட்டருக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த "ரத்னம்" திரைப்படம் வருகிற 26 ஆம் தேதி நாடு முழுவதும் வெளியாக உள்ளது. அதேபோன்று புதுச்சேரியிலும் "ரத்னம்" rathnam movie திரைப்படம் வெளியாக உள்ள சண்முகா திரையரங்கிற்கு வந்த இயக்குனர் ஹரி, விஷால் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்பொழுது நடிகர் விஷாலின் மூன்றாவது திரைப்படமாக இந்த படத்தை இயக்கி உள்ளதாகவும் மிகப்பெரிய வெற்றியை இத்திரைப்படம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும், அனைவரும் திரையரங்கில் வந்து பார்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து தியேட்டரில் குழுமி இருந்த விஷால் ரசிகர்கள் இயக்குனரிடம் செல்பி எடுத்தும் போட்டோ எடுத்தும் மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து புதுச்சேரி நகரப் பகுதிக்கு வந்த இயக்குனர் ஹரி, நேரு வீதி, பாரதி வீதி, மகாத்மா காந்தி வீதி, குபேர் அங்காடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்கிருந்த பூ வியாபாரி, பழ வியாபாரி, காய்கறி வியாபாரி, மற்றும் ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம் 26-ம் தேதி வெளியாக உள்ள விஷால் நடித்த "ரத்னம்" திரைப்படத்தை அனைவரும் திரையரங்கில் வந்து பார்க்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். மேலும் அவருக்கு வியாபாரிகளும் வரவேற்பும் அளித்தனர்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்




















