மேலும் அறிய

Cheran: விஜய் ஆட்சியில் தான் எங்களுக்கு விடிவுகாலம்.. இயக்குநர் சேரன் புகழாரம்.. திமுக,அதிமுக மீது காட்டம்!

முந்தைய ஆட்சியில் எத்தனையோ கோரிக்கைகளை நாங்கள் வைத்தோம். சில நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நிறைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. காரணம் பக்குவமாக உட்கார்ந்து பேசவில்லை என சேரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் உள்ள ஒவ்வொருவரும் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்றால் அது முதலமைச்சர் விஜயின் ஆட்சியி மட்டும் தான் நடைபெறும் என இயக்குநர் சேரன் புகழாரம் சூட்டியுள்ளார். 

சினிமா நிகழ்வில் சேரன் பேச்சு

சென்னை வடபழனியில் தென்னிந்திய சினிமாவின் பத்திரிக்கை தொடர்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ராஜ்மோகன் கலந்துக் கொண்டார். இந்நிகழ்வில் சினிமாவின் பல்வேறு துறைகளைச் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் இயக்குநர் சேரன் அமைச்சர் ராஜ்மோகனிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார். 

சினிமாவை புரிந்த ஒருவர் அமைச்சர் ராஜ்மோகன்

அவர் பேசும்போது, “தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் அமைச்சர் ராஜ்மோகனிடம் வேண்டுகோளை வைக்கின்றனர். நாங்கள் எழுத்தாளர்கள் சங்கத்திற்கு வந்திருக்கிறோம். எங்களிடமும் சில கோரிக்கைகள் உள்ளது. ஆனால் அதனை சுயநலமாக இங்கே கேட்க விரும்பவில்லை. திரை துறையில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. வெளியே பார்க்கும்போது ஒவ்வொருவரும் சிரிப்பது போல தோன்றும். ஆனால் தனியாக வீட்டுக்குச் சென்றால் ஒவ்வொருவரும் ஒரு யோசனையில் மூழ்கியிருப்போம். ஒரு தயாரிப்பாளர் படத்தை எடுத்து அதனை ரிலீஸ் செய்வதில் ஆயிரம் தடைகளும், பிரச்னைகளும் இருக்கிறது. ஒரு படம் எடுக்கும் இயக்குநர் அதனை முடிப்பதற்குள் நிறைய சிரமம் இருக்கும். இந்த துறையை புரிந்துக் கொண்ட ஒருவரை அமைச்சராக நியமித்த முதலமைச்சர் விஜய்க்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

Also Read: தமிழ்நாட்டில் இனி திராவிடம் தலை எடுக்காது.. இயக்குநர் மோகன் ஜி காட்டமான பதிவு!

விஜய் ஆட்சியில் தான் விடிவுகாலம்

அப்படிப்பட்டவர்களால் தான் இதனை தீர்க்க முடியும். இதற்கு முந்தைய ஆட்சியில் எத்தனையோ கோரிக்கைகளை நாங்கள் வைத்தோம். சில நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நிறைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. காரணம் பக்குவமாக உட்கார்ந்து பேசவில்லை. இந்த தவெக அரசு ஒரு குழு ஒன்றை உருவாக்கி என்னென்ன பிரச்னைகள் இருக்கிறது, அதை எப்படி தீர்ப்பது என்பதை ஆலோசிக்க வேண்டும். 

படம் தயாரிக்கும்போது அனைத்து விதமான வரிகளையும் செலுத்தி விடுகிறோம். அதனை ரிலீஸ் செய்ய தடுமாறும்போது யாரும் வாழ்க்கைக் கொடுப்பதில்லை. அப்படியாக எல்லாரும் பிழைப்பதற்கான வழியை அரசு உருவாகக் வேண்டும். ஒருநாள் திரைத்துறையில் எல்லாரும் நல்லா இருக்காங்க என்ற நிலை வர வேண்டும் என்றால் அது முதலமைச்சர் விஜயின் ஆட்சியில் நடந்தால் தான் உண்டு. அவர் மூலமாக மட்டும் தான் எங்களுக்கு விடிவு காலம் வரும் என நம்புகிறேன். இதற்கான முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என சேரன் தெரிவித்தார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget