திருமண ஆசைக்காட்டி ஏமாற்றிய புகாரில் பிக்பாஸ் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு - பைனலுக்கு வருமா பஞ்சாயத்து?
முத்துக்குமரன் மீது குற்றம் சாட்டியிருந்த பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்திருந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு

திருமணம் செய்துக்கொள்வதாக ஆசைக்காட்டி ஏமாற்றியதாக பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில் பிக் பாஸ் புகழ் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமண ஆசைக்காட்டி உறவு வைத்து மோசடி?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவரான முத்துக்குமரன், தன்னிடம் முதலில் நட்பாக பழகி பின்னர் திருமணம் செய்துக்கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உறவு வைத்துக்கொண்டு ஏமாற்றியதாக பெண் ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக கூறி அப்பெண் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முத்துக்குமரன் புகார் அளித்திருந்தார். ஆனால் புகாரின்பேரில் முகாந்திரம் இல்லை எனக்கூறி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முத்துகுமரன் மீது வழக்குப்பதிவு
இந்நிலையில் திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி தன்னை ஏமாற்றியதாகவும், இதனால் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்த பெண், முத்துக்குமரன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து இந்தப்புகார் அடுத்தக்கட்டமாக விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், முத்துக்குமரன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக வழக்கு தொடர்பாக முத்துக்குமரனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தக்கூடுமெனவும் தகவல் வெளியாகி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























