மேலும் அறிய

24 years of Sethu: இயக்குநர் பாலாவை தந்த படம்.. 'சீயான்' விக்ரமுக்கு அடையாளம்.. 24 ஆண்டுகளை கடந்த 'சேது'!

24 years of Sethu: இயக்குநர் பாலா என்ற ஒரு அதீத திறமைசாலியை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய 'சேது' திரைப்படம் வெளியான நாள் இன்று.  

தென்னிந்திய சினிமாவின் ஜாம்பவான்களின் ஒருவரான பாலுமகேந்திராவின் பட்டறையில் செதுக்கப்பட்ட ஒரு கலைஞன் பாலா. திரைப்படம் ஒரு பொழுதுபோக்கு என்பதையும் கடந்து பலரும் பேசத் தயங்கும் சில விஷயங்களை அசாத்தியமான துணிச்சலுடன் கையிலெடுத்து, அதை அழுத்தமான திரைக்கதைக்குள் பொருத்தி மக்களுக்கு அதை திரைப்படம் வாயிலாக காட்சிப்படுத்தி அடிவயிற்றில் இருந்து உலுக்கி எடுத்து விடுவது தான் பாலாவின் தனிச்சிறப்பு. 

24 years of Sethu: இயக்குநர் பாலாவை தந்த படம்.. 'சீயான்' விக்ரமுக்கு அடையாளம்.. 24 ஆண்டுகளை கடந்த 'சேது'!

விக்ரமின் அடையாளம் :

பல ஆண்டுகாலமாக திரைத்துறையில் இருந்தாலும் அங்கீரிக்கப்படாத துரதிஷ்டமான ஒரு கலைஞனாக தமிழ் சினிமாவில் இருந்து வந்த நடிகர் விக்ரமுக்கு விலாசமாய் அமைந்து, அவரின் திரைப்பயணத்தில் ஒரு டர்னிங் பாயிண்டை கொடுத்த படம் 'சேது'. இப்படத்திற்காக சுமார் 13 கிலோ வரை எடை குறைத்தார். 

வெற்றியின் முதல் படி:

தோல்விகளை மட்டுமே சந்தித்த விக்ரம் 9 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு  முதல் முறையாக 'சேது' படத்தின் மூலம் வெற்றியின் முதல் படியைத் தொட்டார். அப்படத்தில் சீயான் என அழைக்கப்பட்ட விக்ரமுக்கு, அதே அவரின் அடையாளமாக மாறி இன்று வரை சீயான் விக்ரம் எனக் கொண்டாடப்படுகிறார். 'சேது' படத்தின் மூலம் செகண்ட் இன்னிங்க்ஸை துவங்கிய விக்ரமின் விளையாட்டு, இன்று வரை ஏறுமுகமாகவே அமைந்து மாஸ் நடிகராக கெத்து காட்டி வாருகிறர். விக்ரமின் பொறுமையான காத்திருப்பு தான் அவரை விஸ்வரூபம் எடுக்க வைத்து. 

24 years of Sethu: இயக்குநர் பாலாவை தந்த படம்.. 'சீயான்' விக்ரமுக்கு அடையாளம்.. 24 ஆண்டுகளை கடந்த 'சேது'!

ஏர்வாடியின் தாக்கம் :

ஏர்வாடி என்றால் என்ன என்பது தெரியும் ஆனால் அதற்குள் ஒரு முறை பயணம் செய்த பாலாவின் தாக்கம் தான் 'சேது'  படம் உருவாக காரணமாய் அமைந்தது. மனநிலை பாதித்த மக்களுக்கு பின்னால் ஒரு அழகான கதை இருக்கும். அவர்களின் மனநிலை பாதிக்க ஏதோ ஒன்று காரணமாக இருந்து இருக்கும். அதை மையப்புள்ளியாக வைத்து ஒரு திரைக்கதையை அமைத்து பார்வையாளர்களின் மனதை கனக்க செய்தவர் இயக்குநர் பாலா. 

இளையராஜாவின் இசை :

'சேது' படம் ஒரு 24 ஆண்டுகளை கடந்தும் இன்றும் ஒரு கனக்கும் கவிதையாக இருப்பதற்கு பாலாவின் இயக்கம், விக்ரமின் நடிப்பு மற்றும் இசைஞானி இளையராஜாவின் உருக வைக்கும் இசை தான் என்றால் அது மிகையல்ல. அவரின் தளும்பும் குரலில் ஒலிக்கும் 'எங்கே செல்லும் இந்த பாதை...' பாடல் இன்று கேட்டாலும் கண்கள் குளமாகும். தமிழ் சினிமாவின் ட்ரெண்ட்டை மாற்றிய ஒரு மைல்கல் 'சேது'. 

24 years of Sethu: இயக்குநர் பாலாவை தந்த படம்.. 'சீயான்' விக்ரமுக்கு அடையாளம்.. 24 ஆண்டுகளை கடந்த 'சேது'!

சேது தான் முன்னோடி :

இன்று ஏராளமான படங்கள் சேதுவின் பாணியில் வெளியானாலும் அவை அனைத்திற்கும் முன்னோடியாக விளங்குவது பாலாவின் 'சேது' தான். இப்படம் வெளியான சமயத்தில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. ஆடியன்ஸ் கூட்டமே இல்லாமல் திரையரங்கமே வெறிச்சோடி காணப்பட்டது.

பிரபல பத்திரிகை ஒன்று சேது படத்தைப் பாராட்டி விமர்சனம் வெளியிட்ட பிறகு, மெல்ல மெல்ல திரையரங்கில் ஆடியன்ஸ் கூட்டம் அதிகரிக்க, ஒரு கட்டத்தில் சேது படத்தை அன்றைய சினிமா ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். கிளைமாக்ஸில் வெற்றி பெரும் காதல் படங்களுக்கு மத்தியில், தோல்வி அடைந்த மிக உருக்கமான காதல் கதையை சமர்ப்பணம் செய்து பாலாவுக்கு கோடான கோடி நன்றிகளும் வாழ்த்துகளும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

வயநாடு சுரங்கப் பாதை: கேரளாவில் பயண நேரம் குறையும், வளர்ச்சி அதிகரிக்கும்! விரைவில் தொடக்கம்
வயநாடு சுரங்கப் பாதை: கேரளாவில் பயண நேரம் குறையும், வளர்ச்சி அதிகரிக்கும்! விரைவில் தொடக்கம்
Sai Sudharsan:  சாய் சுதர்சனுக்கு ஜாக்பாட்! கங்குலி, டிராவிட், கோலிக்கு அடுத்து நம்ம தமிழ் பையன்தான் - இப்படித்தான்!
Sai Sudharsan: சாய் சுதர்சனுக்கு ஜாக்பாட்! கங்குலி, டிராவிட், கோலிக்கு அடுத்து நம்ம தமிழ் பையன்தான் - இப்படித்தான்!
புதுச்சேரி அரசியலில் லாட்டரி அதிபர் மகன் என்ட்ரி: 7 பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவு? 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குமா?
புதுச்சேரி அரசியலில் லாட்டரி அதிபர் மகன் என்ட்ரி: 7 பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவு? 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குமா?
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மீது நடவடிக்கை எடுங்க’ ஆர்.பி. உதயகுமார் அதிரடி புகார்..!
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மீது நடவடிக்கை எடுங்க’ ஆர்.பி. உதயகுமார் அதிரடி புகார்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாலியல் தொல்லை கொடுக்குறாங்க! இவங்களானு ஷாக் ஆயிட்டேன்” வேதனைப்பட்ட ஜோனிடா காந்தி Singer Jonita Gandhi
MAY EYE COME IN ரீ எண்ட்ரி கொடுத்த ஸ்ரீ லோகேஷ் போட்ட EFFORT | Lokesh Kanagaraj | Actor shri issue
School Girl Plate Washing | பாத்திரம் கழுவும் மாணவிகள்! அரசு பள்ளியில் அவலம்! ஆக்‌ஷனில் அன்பில்மகேஷ்
Kanchipuram Police | ”டேய் கைநீட்டி பேசுறியா” புகாரளித்த அதிமுக நிர்வாகி! விரட்டியடித்த POLICE
Inbanithi Stalin | ஸ்டாலின், உதயநிதி வரிசையில்.. நிர்வாக பொறுப்பில் இன்பநிதி! அரசியலுக்கு அச்சாரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வயநாடு சுரங்கப் பாதை: கேரளாவில் பயண நேரம் குறையும், வளர்ச்சி அதிகரிக்கும்! விரைவில் தொடக்கம்
வயநாடு சுரங்கப் பாதை: கேரளாவில் பயண நேரம் குறையும், வளர்ச்சி அதிகரிக்கும்! விரைவில் தொடக்கம்
Sai Sudharsan:  சாய் சுதர்சனுக்கு ஜாக்பாட்! கங்குலி, டிராவிட், கோலிக்கு அடுத்து நம்ம தமிழ் பையன்தான் - இப்படித்தான்!
Sai Sudharsan: சாய் சுதர்சனுக்கு ஜாக்பாட்! கங்குலி, டிராவிட், கோலிக்கு அடுத்து நம்ம தமிழ் பையன்தான் - இப்படித்தான்!
புதுச்சேரி அரசியலில் லாட்டரி அதிபர் மகன் என்ட்ரி: 7 பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவு? 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குமா?
புதுச்சேரி அரசியலில் லாட்டரி அதிபர் மகன் என்ட்ரி: 7 பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவு? 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குமா?
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மீது நடவடிக்கை எடுங்க’ ஆர்.பி. உதயகுமார் அதிரடி புகார்..!
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மீது நடவடிக்கை எடுங்க’ ஆர்.பி. உதயகுமார் அதிரடி புகார்..!
Iran Uses Cluster Bomb: இஸ்ரேல் மீது கொத்து குண்டை வீசிய ஈரான்; அது என்ன செய்யும் தெரியுமா.? விவரம் இதோ
இஸ்ரேல் மீது கொத்து குண்டை வீசிய ஈரான்; அது என்ன செய்யும் தெரியுமா.? விவரம் இதோ
IND vs ENG: நாமதான் பேட்டிங்! புஜாரா இடத்தில் சாய் சுதர்சன்.. மீண்டும் கருண் நாயர் - கலக்கலா? கலக்கமா?
IND vs ENG: நாமதான் பேட்டிங்! புஜாரா இடத்தில் சாய் சுதர்சன்.. மீண்டும் கருண் நாயர் - கலக்கலா? கலக்கமா?
Ind Pak: ”திரும்ப திரும்ப அடிச்ச இந்தியா” கதிகலங்கி அமெரிக்காவிடம் சரணடைந்த பாக்., துணை பிரதமர் ஒப்புதல்
Ind Pak: ”திரும்ப திரும்ப அடிச்ச இந்தியா” கதிகலங்கி அமெரிக்காவிடம் சரணடைந்த பாக்., துணை பிரதமர் ஒப்புதல்
நீங்களும் முதலாளி ஆகலாம் ! அரசின் அதிரடி அறிவிப்பு... ரூ.1.65 லட்சம் மானியம்... மிஸ் பண்ணிடாதீங்க !
நீங்களும் முதலாளி ஆகலாம் ! அரசின் அதிரடி அறிவிப்பு... ரூ.1.65 லட்சம் மானியம்... மிஸ் பண்ணிடாதீங்க !
Embed widget