Tamanna: “ஷூட்டிங் ஸ்பாட்டில் தமன்னாவுக்கும் எனக்கும் சண்டைதான்” - நடந்த கதையைச் சொன்ன டைரக்டர்!!
தமன்னா நடிப்பில் எப்3 என்ற தெலுங்கு திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில் வெங்கடேஷ், வருண் தேஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கேடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை தமன்னா சில ஆண்டுகளிலேயே கோலிவுட்டில் பெரும் வளர்ச்சியடைந்து விஜய், அஜித், தனுஷ் உள்ளிட்ட பெரும் நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின்னர் தமிழில் வாய்ப்புகள் குறைய தெலுங்கு பக்கம் ஒதுங்கிய அவர், தற்போது டோலிவுட் திரையுலகில் மிகவும் பிசியாகியிருக்கிறார். குர்துந்தா சீதகலம், போல சங்கர், போலே சுடியான், சோர் நிகல் கே பாகா. பப்ளி பவுன்சர், தட் ஈஸ் மஹாலட்சுமி, ஏன் என்று காதல் என்பேன், காத்து கருப்பு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
View this post on Instagram
இந்நிலையில் தமன்னா நடிப்பில் எப்3 என்ற தெலுங்கு திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில் வெங்கடேஷ், வருண் தேஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை அனில்ரவிபுடியே இயக்கினார். படம் வெளியாகியுள்ள நிலையில் படப்பிடிப்பின்போது தமன்னாவுக்கும், இயக்குநருக்கும் இடையே நடந்த பிரச்சினை தொடர்பான தகவல்தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் இயக்குநர் அனில்ரவிபுடியே, ''படத்தை அவசரமாகமுடிக்க வேண்டுமென்ற ஒரு மனநிலையில் நான் இருந்தேன்.
View this post on Instagram
அதேபோல் தமன்னாவுக்கும் மறுநாள் வேறு இடத்தில் ஷூட்டிங் இருந்தது. அவரும் அவசரமாக செல்ல நினைத்தார். அதே நேரத்தில் அவர் நடிக்க வேண்டிய மீதக்காட்சிகள் எங்கள் படத்தில் இருந்தது. அதை முடித்துக்கொடுக்கச் சொன்னேன். இதுவே இருவருக்கும் இடையே வாக்குவாதத்தை உண்டாக்கியது. பின்னர் இருதரப்பும் சமாதானமாகி அந்தக்காட்சிகள் படமாக்கப்பட்டன என்றார்.