Ameer on Udhayanidhi stalin : உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதால் மக்களுக்கு பாதிப்பில்லை
Ameer on Udhayanidhi stalin : தான் நடித்துள்ள படத்தை பற்றி பேச துவங்கிய் அமீர், உதயநிதி ஸ்டாலின் பதிவியேற்றதை பற்றி பேசினார்
‘உயிர் தமிழுக்கு’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ள அமீர் அப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதிவியேற்றதை பற்றி பேசியுள்ளார்.
‘மெளனம் பேசியதே’ படத்தை இயக்கி டைரக்டராக கால்தடம் பதித்த இவர், அதைதொடர்ந்து ‘ராம்’, ‘பருத்திவீரன்’ மற்றும் ‘ஆதிபகவன்’ ஆகிய நான்கு படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய நான்கு படங்களும் வெவ்வேறு கதைக்களத்தை கொண்டது. இந்த நான்கு படங்களிலும்,
பருத்திவீரன் மட்டும் தனிச்சிறப்பினை பெற்று தமிழ்சினிமாவின் இன்றியமையாத படமாக திகழ்கிறது. ஜெயம் ரவியை வைத்து இவர் இயக்கிய ஆதிபகவன் படம் படு தோல்வி அடைந்த காரணத்தினாலோ என்னவோ இவர் படம் எடுக்கும் பக்கமே இன்று வரை செல்லவில்லை. 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வடசென்னை’ படத்தில் ராஜன் கதாப்பாத்திரத்தில் நடித்து.. இல்லை இல்லை அந்த கேரக்டராகவே வாழ்ந்து அசத்தினார்.
தற்போது, இவர் நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ என்ற படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நிகழ்ந்தது.அதில் பேச துவங்கிய அவர், மொழி பற்றி பேசினார். பின் இந்தப்படம் மொழி பிரச்னையை பேசும் படம் அல்ல, மொழியை பற்றி பேசும் படம் என கூறினார். சமீபத்தில் இந்தி திணிப்பு, வட மாநில மக்களின் வருகை ஆகிய பல பிரச்னைகள் நடந்து வரும் சமயத்தில், இந்த படமானது அதற்கு குரல் கொடுக்கும் வகையில் அமையும். இப்படி பேசிகொண்டு இருந்தவர். திடீர் என்று அரசியல் பற்றி பேசினார். அதன் பின், இன்று அமைச்சராக பதிவியேற்ற உதயநிதி ஸ்டாலினை பற்றியும் பேசினார். அவர், அமைச்சராவதால்,மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
View this post on Instagram
சினிமாவை பற்றி பேச துவங்கிய அமீர், மெல்ல மெல்ல சமூக பிரச்னைகள் பற்றி பேசி, பின் அரசியல் களத்தில் நடக்கும் விஷயத்தைஸ் பற்றி பேசினார். எப்போதும், அப்டேட்டாக இருக்கும், அமீர் அவர் மனதில் இருக்கும் கருத்துக்களை சொல்ல தயங்குவதில்லை. அதனால், ஏதாவது பிரச்னை பற்றி பேசும் இடத்திலோ, அல்லது ட்ரெண்டிங்காக நடக்கும் விஷயத்திலோ, அமீரின் பெயரை காணமுடிகிறது.