Bigg Boss: பிக்பாஸிலும் எதிரொலித்த சட்டமன்ற கூட்டத்தொடர்.. இது புதுசா இருக்குண்ணே!
Bigg Boss 10: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடப்பது போல டாஸ்க்குகள் இடம்பெற்றுள்ளது.

தமிழில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சியில் ஒன்று விஜய் தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பபாகும் நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.
பிக்பாஸ்:
இந்த நிகழ்ச்சியின் 10வது சீசன் நேற்று தொடங்கியது. கடந்த சில சீசன்கள் பெரியளவு ரசிகர்கள் மத்தியில் சென்று சேராத நிலையில், ரசிகர்களை கவரும் வகையில் மிகவும் வித்தியாசமாக இந்த பிக்பாஸசை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
சட்டசபை பாணியில் டாஸ்க்:
#Day1 #Promo2 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) September 7, 2026
Boss Tamil Season 10 - இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/1lxSs5vPSG
இதன் ஒரு கட்டமாக சட்டசபைக் கூட்டத்தொடர் போலவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு பகுதியை நடத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் விஜய் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு அவரது செயல்பாடுகள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, முழு நேரலையாக சட்டமன்ற கூட்டத்தொடர் ஒளிபரப்பாகி வரும் நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடர் வாடிக்கையாளர்களை மிகப்பெரிய அளவில் சென்று சேர்ந்துள்ளது.
#Day1 #Promo3 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) September 7, 2026
Boss Tamil Season 10 - இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/gdF9wfTyzY
இதன் தாக்கம் மக்கள் மத்தியில் இருப்பதை உணர்ந்து கொண்ட பிக்பாஸ் இந்த ரியாலிட்டி ஷோவிலும் ஆளும் அணி, எதிரணி என்ற இரண்டு அணிகளை உருவாக்கி நிகழ்ச்சியை விறுவிறுப்பாக ஏற்பாடு செய்துள்ளது. இதன் ப்ரமோ இன்று வெளியாகியது.
போட்டியாளர்கள்:
பிக்பாஸின் இந்த 10வது சீசனில் லட்சுமி ப்ரியா, ஷாதிகா, ப்ரிவிநாத், ஜாவித் ஷெரீப், அஸ்மிதா நீலமேகம், முத்தழகி, வினோத் பாபு, சாந்தினி, சாவின்யா வேலு, குமரன் தங்கராஜன், ராகவ் ரங்கநாதன், தன்யா பல்லத், அடாவடி அன்சர், முகேஷ், ப்ளாக் பாண்டி, அவினாஷ் அசோக், ஜேசன் கெளசி, முனியம்மாள், ஷமா ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.
இந்த சீசனில் விறுவிறுப்பைக் கூட்டி ரசிகர்களை அதிகரிக்க பல்வேறு வித்தியாசமான வியூகங்களை பிக்பாஸ் கையில் எடுத்துள்ள நிலையில், அடுத்தடுத்த நாட்களில் இது ரசிகர்களிடம் எடுபடுமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
சட்டமன்ற கூட்டத்தொடரில் இடம்பெறும் ஜனநாயக மாண்பு, வெளிநடப்பு செய்கிறோம், அவை போன்ற வார்த்தைகளும் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் பேசுவதையும் ப்ரமோ வீடியோவில் காண முடிந்தது.
ட்ரெண்டிங் செய்திகள்





















