மேலும் அறிய

‘பெண்கள் மட்டும்தான் தாலி அணிய வேண்டுமா?’ பகவத் கீதை குறித்து நமீதா பேச்சால் சர்ச்சை

தாலி, பொட்டு பெண்களுக்கு மட்டும்தானா? திருமணத்துக்குப் பிறகு பெண்களுக்கு மட்டும் விதிக்கப்படும் சம்பிரதாயங்கள் குறித்து நடிகை நமீதா கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நமீதா. எங்கள் அண்ணா, பில்லா, அழகிய தமிழ்மகன், இங்கிலீஷ்காரன், பச்சைக்குதிரை உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். திருமணத்துக்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை வெகுவாகக் குறைத்துக்கொண்ட நமீதா, தற்போது தனது சினிமா அனுபவங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு பேட்டிகளில் மனம் திறந்து பேசி வருகிறார்.

தாலி பொட்டு பெண்களுக்கு மட்டுமா ? நமீதா கேள்வி

அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணத்துக்குப் பிறகு பெண்கள் மீது மட்டும் சுமத்தப்படும் சமூகக் கட்டுப்பாடுகள் குறித்து நமீதா பேசியுள்ளார். குறிப்பாக, பெண்கள் தாலி அணிய வேண்டும், நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும் போன்ற சம்பிரதாயங்கள் ஏன் பெண்களுக்கு மட்டுமே விதிக்கப்படுகின்றன என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பேசிய நமீதா, “திருமணமானதும் ஒரு பெண் கட்டாயம் தாலி அணிய வேண்டும், பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் இதுபோன்ற கட்டுப்பாடுகள் ஆண்களுக்கு ஏன் இல்லை?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் மட்டுமே பல்வேறு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், வரலட்சுமி நோன்பு குறித்தும் நமீதா தனது கருத்தை பகிர்ந்துள்ளார். கணவரின் ஆயுள் மற்றும் நலனுக்காக மனைவி விரதம் இருக்க வேண்டும் என்ற நடைமுறை இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அதேபோல் கணவரும் மனைவியின் நலனுக்காக ஏதேனும் ஒரு நாளாவது விரதம் இருக்க வேண்டும் என்ற விதிமுறை ஏன் இல்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். பெண்களை நோக்கியே பெரும்பாலான சமூக விதிமுறைகள் உருவாக்கப்பட்டிருப்பது ஏன் என்பதே அவரது கேள்வியாக இருந்துள்ளது.

அதோடு, பெண்கள் தாலி அணிய வேண்டும் என்ற கட்டாயம் பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்றும் நமீதா கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோன்ற விதிமுறைகள் புனித நூல்களில் இருப்பதாக தான் நினைக்கவில்லை என்றும், சமூகமே காலப்போக்கில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை உருவாக்கி அவற்றை அவர்கள் மீது திணித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நமீதாவின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
TVK vs DMK: அவுட்சோர்சிங் நியமனம்; உத்தமர் வேடம் கட்டும் திமுக-வின் போலிக்கொந்தளிப்பு - தவெக விமர்சனம்
TVK vs DMK: அவுட்சோர்சிங் நியமனம்; உத்தமர் வேடம் கட்டும் திமுக-வின் போலிக்கொந்தளிப்பு - தவெக விமர்சனம்
Anbil Mahesh: அன்பில் மகேஷிற்கு ஜாமின் இல்லை..! நேரு வீட்டில் ரெய்டு, முன்ஜாமின் முன்னேற்றக் கழகம் - தவெக விமர்சனம்
அன்பில் மகேஷிற்கு ஜாமின் இல்லை..! நேரு வீட்டில் ரெய்டு, முன்ஜாமின் முன்னேற்றக் கழகம் - தவெக விமர்சனம்
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
MK Stalin: ஏது தெரியாமா கைது பண்ணிட்டிங்களா? அவர் யாரு தெரியுமா? பொங்கி எழுந்து வரலாறு சொன்ன ஸ்டாலின்
ஏது தெரியாமா கைது பண்ணிட்டிங்களா? அவர் யாரு தெரியுமா? பொங்கி எழுந்து வரலாறு சொன்ன ஸ்டாலின்
Chennai FSI: கட்டிடங்களுக்கான FSI உயருமா? உயராதா? பொருளாதார வளர்ச்சிக்கான வழி - தமிழக அரசு அஞ்சுவது ஏன்?
கட்டிடங்களுக்கான FSI உயருமா? உயராதா? பொருளாதார வளர்ச்சிக்கான வழி - தமிழக அரசு அஞ்சுவது ஏன்?
Embed widget