தனுஷ் படத்தில் நாயகி..! செல்வராகவனுக்கு நன்றி சொன்ன பிகில் பட நடிகை..!
தனுஷூடன் பணியாற்ற வாய்ப்பு அளித்ததற்கு நன்றி என்று நானே வருவேன் படத்தின் நாயகி இந்துஜா செல்வராகவனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் தனுஷ். இவரது அண்ணன் செல்வராகவன். இவர் தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர். பீஸ்ட் படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான கடைசியாக நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு பிறகு நானே வருவேன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாயகனாக தனுஷ் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு நாயகியாக இந்துஜா நடித்து வருகிறார். இவர் மேயாத மான் படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாகவும் நடித்து அசத்தியிருந்தார். இந்த நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷின் நானே வருவேன் படத்தில் நாயகியாக நடிப்பதற்கு இந்துஜா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் தனக்கு மிகவும் பிடித்தமான செல்வராகவன் சாருடன் பணிபுரிந்ததை பற்றி நான் நினைக்கும்போதெல்லாம் எனக்குள் இருக்கும் குழந்தை எட்டிப்பார்க்கும். இப்படி ஒரு அனுபவித்ததை கொடுத்தற்கு நன்றி சார் என பதிவிட்டுள்ளார். நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் நிறைவடைந்தது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதில், ஒரு தனுஷிற்கு இந்துஜா ஜோடியாக நடித்துள்ளார். தனுஷ் – செல்வராகவன் 11 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்திருப்பதால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அசுரன் படத்திற்கு பிறகு வெளியான ஜகமே தந்திரம், மாறன் போன்ற படங்கள் தனுஷிற்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. தற்போது அவர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். செல்வராகவனிடம் இருந்தும் மெகாஹிட் திரைப்படங்கள் கிடைத்து நீண்ட ஆண்டுகள் ஆகியுள்ளதால் இந்த படம் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்