மேலும் அறிய

D55 title : தனுஷ் மம்மூட்டி மாஸ் காம்போ...D55 படத்தின் டைட்டில் நாளை அறிவிப்பு

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு நாளை வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது

நடிகர் தனுஷ் தற்போது பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில், அவரது 55-வது திரைப்படமான D55 குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் நாளை வெளியிடப்பட உள்ளதாக தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷ், தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து வருகிறார். தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கர திரைப்படம் ரசிகர்களிடம்  எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. தனுஷ் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தாலும் அவரது ரசிகர்கள் கமர்சியல் படங்களையே விரும்புகிறார்கள். அந்த வகையில் தனுஷ் ரசிகர்கள் பெரியளவில் எதிர்பார்ப்பு வைத்திருக்கும் திரைப்படம் D55. 

D55 டைட்டில் அறிவிப்பு

அமரன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனுஷூடன் கைகோத்துள்ளார். இந்த படத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மம்மூட்டி மற்றும் தனுஷ் ஒரே படத்தில் இணைவது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் இளம் நடிகை ஶ்ரீலீலாவும் , சாய் பல்லவியும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

படத்தின் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்கள் தொடர்பான தகவல்கள் இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஶ்ரீலீலா ஆகியோர் இணைந்திருப்பது மட்டுமே இந்தப் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் ஏற்கனவே தொடங்கியுள்ளது.

நாளை வெளியாகவுள்ள டைட்டில் அறிவிப்புடன் படம் தொடர்பான கூடுதல் தகவல்களும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் D55 திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். தனுஷின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான படைப்பாக இந்த திரைப்படம் அமையும் என்ற நம்பிக்கையும் திரையுலக வட்டாரங்களில் நிலவி வருகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget