பாலிவுட்டின் மூன்றாவது வெற்றியை பதிவு செய்த தனுஷ்..தேரே இஷ்க் மே 2 நாள் வசூல்
Tere Ishk Mein Box Office : இந்தியில் தனுஷ் க்ரித்தி சனோன் நடித்துள்ள தேரே இஷ்க் மே திரைப்படத்தி 2 நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன

தனுஷ் இந்தியில் நடித்துள்ள தேரே இஷ்க் மே திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தின் மூலம் இந்தியில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளார் தனுஷ். கடந்த 28 ஆம் தேதி வெளியான தேரே இஷ்க் மே படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன
தேரே இஷ்க் மே
ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் , க்ரித்தி சனோன் நடித்துள்ள திரைப்படம் 'தேரே இஷ்க் மே' . ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நாளை நவம்பர் 28 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் இப்படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. 2011 ஆம் ஆண்டு ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ராஞ்சனா படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார் நடிகர் தனுஷ். இந்தியில் நடித்த முதல் படமே 100 கோடி வசூல் வெற்றிபெற்றது. தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு இதே இயக்குநர் நடிகர் கூட்டணியில் அத்ரங்கி ரே திரைப்படம் வெளியாகி அதுவும் வெற்றிபெற்றது. தற்போது மூன்றாவது முறையாக இந்த கூட்டணியில் உருவாகியுள்ள படம் தேரே இஷ்க் மே கடந்த நவம்பர் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
நீண்ட நாட்களுக்குப் பின் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்திய கதையில் தனுஷ் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து வருகிறது. 2025 ஆம் ஆண்டு வெளியான சிறந்த காதல் கதையாக இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடத் துவங்கியுள்ளார்கள்
2 நாள் வசூல்
தேரே இஷ்க் மே திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் 31 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனுஷ் இந்தியில் நடித்த மற்ற படங்களைப் போலவே இந்த படத்திற்கும் தமிழ் ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்கு கிடைக்கவில்லை. ஆனால் இந்தியில் படம் 100 கோடி வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது
Back to back BLOCKBUSTER ENERGY!❤️🔥🔥#TereIshkMein now in cinemas worldwide, in Hindi, Tamil and Telugu.
— T-Series (@TSeries) November 30, 2025
Book your tickets now: link: https://t.co/bhQRYGBCFc@dhanushkraja @kritisanon @arrahman @aanandlrai #BhushanKumar #HimanshuSharma #KrishanKumar @Irshad_kamil… pic.twitter.com/pM9BsN4UG0






















