Actor Dhanush : முதலிடத்தில் நடிகர் தனுஷ்... ட்விட்டரில் 11 மில்லியன் ஃபாலோவர்ஸ் பெற்ற முதல் கோலிவுட் நடிகர்
Dhanush : நடிகர் தனுஷ் தான் 11 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ள முதல் கோலிவுட் நடிகர். மேலும் தென்னிந்திய நடிகர்களில் நம்ம நடிகர் தனுஷ் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
தமிழ் சினிமாவின் ஆல் ரவுண்டர் நடிகர் மற்றும் இன்றைய முன்னணி நடிகர்களில் மிகவும் பிரபலமானவர் மற்றுமின்றி வசூல் ரீதியாகவும் முன்னணியில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். இந்த நடிகருக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் உள்ளது. அந்த வகையில் அவருக்கு ட்விட்டரில் 11 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை பெற்றுள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி என்பதால் அவரை கொண்டாடி வருகிறார்கள்.
முதல் கோலிவுட் நடிகர் :
நடிகர் தனுஷ் தான் 11 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ள முதல் கோலிவுட் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தென்னிந்திய நடிகர்களில் நம்ம நடிகர் தனுஷ் இரண்டாவது இடத்தில் உள்ளார். 11.5 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை கொண்டு முதல் இடத்தில் இருக்கிறார் டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு.
First Tamil actor to cross 11 million followed on Twitter . Congratulations @dhanushkraja 🎉🎉🎉 One of the few Tamil actors who rightly uses the platform, early bird advantage + his Pan India / global reach 👌👌👌 pic.twitter.com/uXOkmIDu6G
— Rajasekar (@sekartweets) September 13, 2022
உலகளவில் பிரபலம் :
கோலிவுட்டின் அதிக அளவிலான ட்விட்டர் ஃபாலோவர்ஸ்களை கொண்ட நடிகர் தனுஷுக்கு திரைப்பட துறையை சார்ந்தவர்கள் மற்றும் பயனாளர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவர் வணீக ரீதியாகவும் வெற்றி பெற்றவர். மேலும் இந்த ட்விட்டர் தளத்தை மிகவும் சிறந்த முறையில் பயன்படுத்தும் முதல் பேன் இந்தியா நடிகர். உலகளவில் பிரபலமான நடிகராக விளங்கும் தனுஷிற்கு வாழ்த்துக்கள்.
வசூலில் சாதனை:
இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான "திருச்சிற்றம்பலம்" திரைப்படம் ரிலீஸான நாள் முதல் வெற்றி நடை போட்டு வருகிறது. சூப்பர் ஹிட் பிளாக் பஸ்டர் பாக்ஸ் ஆஃபிஸ் திரைப்படமாக வெற்றிபெற்று கலெக்ஷனை வாரி குவித்துள்ளது. இதுவரையில் நடிகர் தனுஷ் நடித்த எந்த ஒரு திரைப்படமும் இந்த அளவிற்கு கலெக்ஷனை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் திரை வாழ்வில் இப்படம் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது.
A big thank you 🙏 25 beautiful days of #Thiruchitrambalam pic.twitter.com/dglmcNPDvT
— Dhanush (@dhanushkraja) September 11, 2022
பாசிட்டிவ் விமர்சனம் :
"திருச்சிற்றம்பலம்" திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது மற்றும் பாசிட்டிவ் விமர்சனங்களால் படக்குழுவினர் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர். இதற்கு முன்னர் தனுஷ் நடிப்பில் வெளியான "கர்ணன்" திரைப்படம் சுமார் 51 கோடி வசூல் செய்து இருந்தது. அந்த சாதனையை முறியடித்து சுமார் 110 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியுள்ளது "திருச்சிற்றம்பலம்" திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் "நானே வருவேன்" படத்தில் நடித்துள்ளார். இப்படம் ட்ரைலர் சமீபத்தில் தான் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் செப்டம்பர் 29ம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.