மேலும் அறிய

Dhanush Helps Bonda Mani: சிகிச்சைக்கு பணம் அனுப்பிய தனுஷ்..எமோஷனல் ஆகி வீடியோ வெளியிட்ட போண்டாமணி!

Actor Dhanush Helped Bonda Mani: நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு நடிகர் தனுஷ் பணம் கொடுத்து உதவி இருக்கிறார்.

நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு  நடிகர் தனுஷ்(Dhanush) பணம் கொடுத்து உதவி இருக்கிறார். 

இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான பாக்யராஜின் பவுனு பவுனுதான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 1994 ஆம் ஆண்டில் வெளியான தென்றல் வரும் தெரு படம் போண்டா மணிக்கு திருப்புமுனையாக அமைந்தது.தொடர்ந்து கவுண்டமணி, வடிவேலு, விவேக்குடன் இணைந்த அவர், நான் பெத்த மகனே, சுந்தரா டிராவல்ஸ், அன்பு, திருமலை, ஐயா, ஆயுதம், வின்னர், வேலாயுதம், படிக்காதவன், மருதமலை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை காட்சிகளில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

இவர் தற்போது இரண்டு கிட்னிகளும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்த தகவலை நடிகர் பெஞ்சமின் வீடியோவாக வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து போண்டா மணியை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரின்  மருத்துவ செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் முருகன் கோயிலில் செய்தியாளர்களை சந்தித்த  நடிகர் வடிவேலு, போண்டா மணிக்கு தன்னால் இயன்ற உதவியை செய்யவுள்ளதாக தெரிவித்தார். 

அதனைத்தொடர்ந்து நடிகர் விஜய்சேதுபதி அவருக்கு 1 லட்சம் கொடுத்து உதவினார். இந்த உதவிக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட போண்டா மணி, “ அன்பு அண்ணன் நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் கிங்காங்கிடம் நம்பர் வாங்கி ரூ.1 லட்சம் என் பேங்க் அக்கவுண்ட்ல போட்டு விட்டுருக்காரு. அந்த ஒரு லட்சம் ஒரு கோடிக்கு சமம் என்றார். மேலும் வடிவேலு செய்த உதவியை குறிப்பிட்ட அவர், திருச்செந்தூர்ல வடிவேல் சார் என்னை பத்தி பேசிருக்காரு. அதுவே பாதி உடம்பு சரியான மாதிரி இருக்குது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் வந்து தமிழக அரசு முழு சப்போர்ட் கொடுக்கும் என சொன்னது புத்துணர்ச்சியா இருந்தது.” என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில் பிரபல நடிகரான தனுஷ் போண்டா மணிக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவி இருக்கிறார். இதனையடுத்து தனுஷ் செய்த உதவிக்கு நன்றி கூறி அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், “ வணக்கம் தம்பி தனுஷ், நீங்கள் கொடுத்த 1 லட்சம் ரூபாய் எனக்கு வந்து சேர்ந்தது. ரொம்ப சந்தோஷம். எனது சார்பிலும் என்னுடைய குடும்பத்தினர் சார்பிலும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்தப்பணம் இந்த நேரத்தில் பெரிய உதவியா இருக்கு. இந்த சூழ்நிலையில் நீங்கள் இப்படியெல்லாம் உதவி பண்றது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு." என்று பேசியிருக்கிறார். 

தலைப்பு செய்திகள்

லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget