Kangana Ranaut : `திரை தீப்பிடிக்கும்!’ ஏஜெண்ட் அக்னியாக நடிக்கும் கங்கனா.. வெளிவரும் `தாக்கத்’!
பாலிவுட் நடிகை கங்கனா ரனௌத் நடித்துள்ள `தாக்கத்’ திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், கங்கனாவின் ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ள `தாக்கத்’ திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், கங்கனாவின் ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏஜெண்ட் அக்னி என்ற உளவாளியின் வேடத்தில் நடித்துள்ள நடிகை கங்கனா, இந்த ஆக்ஷன் திரைப்படத்தின் மூலமாக நிச்சயமாக திரையில் மக்கள் ரசித்துக் கொண்டாடுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ட்ரைலரின், நடிகை கங்கனா ரனௌத் தன்னுடைய ஏஜெண்ட் அக்னி கதாபாத்திரத்தில், உளவாளியாகவும், கொலையாளியாகவும் காட்டப்படுகிறார். தன்னுடைய `ரிங் மாஸ்டரிடம்’ கட்டளைகளைப் பெறும் ஏஜெண்ட் அக்னி, நிலக்கரி சுரங்கங்களில் நிகழும் இந்தியாவின் மிகப்பெரிய மனித கடத்தல் வழக்கில் பணியாற்ற அவருக்கு ஆணையிடப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் ராம்பால் வில்லன் கதாபாத்திரத்தில் வருகிறார். உளவாளியாக வரும் கங்கனா, இந்த வழக்கின் விசாரணையின் போது வெவ்வேறு லுக்கில் வருவது இந்தப் படத்தின் சிறப்பம்சமாக காட்டப்படுகிறது.
`தாக்கத்’ திரைப்படத்தைக் குறித்து பேசியுள்ள நடிகை கங்கனா ரனாவத், `சவாலான திரைப்படங்களில் நடிப்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. `தாகட்’ அப்படியான திரைப்படம். ஏஜெண்ட் அக்னி கதாபாத்திரத்தில் விரும்பி நடித்துள்ளேன். `தாகட்’ முற்றிலும் புதிய வடிவிலான திரைப்படமாக உருவாகியுள்ளதோடு, நாங்கள் மனதில் நினைத்த கனவைக் கடுமையாக உழைத்து திரைப்படமாக உருவாக்கியுள்ளோம். ஏஜெண்ட் அக்னி என்பது இயற்கையின் வடிவமாகவும், நம்மில் இருக்கும் பலத்தின் வடிவமாகவும் காட்டியுள்ளோம். மேலும், இந்தத் திரைப்படம் வலிமையின் கொண்டாட்டமாக உருவாகியுள்ளது’ எனக் கூறியுள்ளார்.
`தாக்கத்’ திரைப்படத்தில் நடிகர்கள் கங்கனா ரனௌத், அர்ஜுன் ராம்பால், சாஸ்வதா சாட்டர்ஜி, திவ்யா தத்தா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வரும் மே 20 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram