Devi Sri Prasad : பிரபல நடிகையுடன் தேவி ஸ்ரீ பிரசாத் ரகசிய திருமணமா? ...உண்மையில் நடந்தது இதுதான்..!
டிஎஸ்பி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தேவி ஸ்ரீபிரசாத் தமிழ், தெலுங்கில் பல முன்னணி இசையமைப்பாளராக உள்ளார்.
தான் ரகசிய திருமணம் செய்துக் கொண்டதாக தகவல் வெளியான நிலையில் பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
டிஎஸ்பி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தேவி ஸ்ரீபிரசாத் தமிழ், தெலுங்கில் பல முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். தமிழில் கமல்ஹாசன், விஜய், அஜித், ஜெயம் ரவி, தனுஷ்,சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களிலும் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். இந்த ராக் ஸ்டார் தற்போது தெலுங்கில் அதிக படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீப காலங்களில் வெளியான புஷ்பா, வாரியர் ஆகிய படத்தின் பாடல்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
View this post on Instagram
இதற்கிடையில் தேவி ஸ்ரீபிரசாத் மீண்டும் திருமணம் தொடர்பான சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். முன்னதாக சார்மி கவுர், பிரணிதா சுபாஷ் போன்ற நடிகைகளுடன் டிஎஸ்பிக்கு ரகசிய உறவு இருந்ததாக தகவல் வெளியான நிலையில் 3 பேருமே அதனை மறுத்தனர். அந்த வகையில் தற்போது பிரபல தெலுங்கு நடிகை பூஜிதா பொன்னாடை அவர் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது.
View this post on Instagram
இதனை மறுத்துள்ள பூஜிதா பொன்னாடா அது உண்மையல்ல என்றும், தான் மிகவும் தனிமையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற வதந்திகள் எங்கிருந்து வருகின்றன என்று தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த நடிகை பூஜிதா 2016 ஆம் ஆண்டு வெளியான ஊபிரி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். ரங்கஸ்தலம் , கல்கி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான அவர் தமிழிலும் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.