![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
"தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்க ஆசை; அம்மாவுக்கு இந்த பெயர் ரொம்ப பிடிக்கும்" - ஸ்ரீதேவி மகள் ஜான்வி
ஜான்வி அடுத்தடுத்து சுவாரசியமான படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் இரண்டு, கோலமாவு கோகிலா ரீமேக்கான குட் லக் ஜெர்ரி மற்றும் மலையாள திரைப்பட ரீமேக்கான மிலி ஆகும்.
![Desire to act in South Indian films Sridevi daughter Janhvi kapoor interview for Filmfare Magazine](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/24/cd457f2fddb61f6938462b1147bf52a0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அவரது குடும்பத்தினர் குறித்து நெகிழ்வான விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். சமீபத்தில் ஃபிலிம்ஃபேர் இதழுக்கு ஜான்வி ஒரு நேர்காணலை அளித்துள்ளார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த பேட்டியில் அவர் அப்பா போனி கபூர், சகோதரிகள் குஷி கபூர் மற்றும் அன்ஷுலா கபூர் மற்றும் சகோதரர் அர்ஜுன் கபூர் ஆகியோர் தனது வாழ்க்கையின் வழிகாட்டிகள் என்று கூறி அவர்கள் பற்றி பேசினார். அதோடு தனது தாய், மறைந்த நடிகை ஸ்ரீதேவி, தனது பெயரான 'ஜான்வி'யை எவ்வளவு நேசித்தார் என்றும் விவரித்து பேசியுள்ளார்.
View this post on Instagram
ஃபிலிம்ஃபேருக்கு அவர் அளித்த பேட்டியில், ஜான்வி கபூரிடம், ஜுதாய் என்ற இந்தி படத்தின் ஊர்மிளா மடோன்கரின் கதாபாத்திரத்தின் பெயர்தான் அவருக்கு வைக்கப்பட்டுள்ளதா என்று கேட்கப்பட்டது. அதற்கு, “இல்லை, ஜூதாய் படத்தின் ஊர்மிளாவின் கதாபாத்திரத்தின் பெயர் எனக்கு சூட்டப்படவில்லை. படத்திற்கு முன்பே அப்பாவுக்கு இந்த பெயர் மிகவும் பிடித்திருந்தது, அம்மாவும் இதே பெயரில் நடித்துள்ளார் என்று நான் நினைக்கிறேன். மேலும், ஜான்வி என்னும் பெயரின் பொருள் தூய்மை, அந்த பெயரை அம்மா மிகவும் நேசித்தார், அவர் என்னைப் பார்த்துக்கொண்டே இருப்பார். நான் தூய்மையான ஆன்மாவை பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று கூறிக் கொண்டே இருப்பார். எனவே அந்த அர்த்தத்தில் அந்த பெயர் அம்மாவிடம் எதிரொலித்ததாக நான் உணர்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.
ஜான்வி அடுத்தடுத்து சுவாரசியமான படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் இரண்டு, கோலமாவு கோகிலா ரீமேக்கான குட் லக் ஜெர்ரி மற்றும் மலையாள திரைப்பட ரீமேக்கான மிலி ஆகும். எனவே மேலும் நிறைய தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு, “தமிழ், தெலுங்கு அல்லது மலையாளம் எதுவாக இருந்தாலும் ஒரு தென்னிந்திய திரைப்படத்தில் நடிக்க விரும்புகிறேன். நான் நீண்ட நாட்களாகவே நிறைய தென்னிந்திய சினிமாக்கள் பார்க்கிறேன், நேரடி தென்னிந்திய திரைப்படத்தில் நடிக்க சரியான வாய்ப்புக்காக நான் காத்திருக்கிறேன். தென்னிந்திய சினிமாவுக்கு என ஒரு வசீகரம் உள்ளது." என்றும் அவர் கூறினார். தமிழ் மலையாள ரீமேக் படங்கள் தவிர்த்து, ஜான்வி தற்போது பாவால் படத்தில் நடித்து வருகிறார், அதில் அவர் வருண் தவானுடன் இணைந்து நடித்து வருகிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)