மேலும் அறிய

Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு; கைவிரித்த தமிழக அரசு- உழைப்பு சுரண்டலா?

இல்லாத காரணங்களைக் கூறி சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த தமிழக அரசு மறுப்பது கவுரவ விரிவுரையாளர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.

கவுரவ விரிவுரையாளர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு வழங்க இயலாது என்று தமிழக அரசு, தெரிவித்துவிட்ட நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாமல், அரசு துரோகமிழைப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

''தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான மாத ஊதியத்தை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்துவது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருந்த நிலையில், அதை செயல்படுத்த இயலாது என்று அரசு அறிவித்துள்ளது. கவுரவ விரிவுரையாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதற்குக் கூட அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 7314 கவுரவ விரிவுரையாளர்கள் மதிப்பூதியத்தின் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். கல்லூரிகளின் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கு தேவையான தகுதியும், அனுபவமும் இருக்கும் போதிலும், அவர்களுக்கு மாதம் ரூ.25,000 மட்டுமே மதிப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

2019-ல் ஆணையிட்ட யுஜிசி

அவர்களுக்கு ஒரு பாட வேளைக்கு ரூ.1500 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.50000 மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு கடந்த 28.01.2019ஆம் நாள் ஆணையிட்டது. அதை செயல்படுத்த தமிழக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கவுரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்த வழக்கில் அக்டோபர் 18ஆம் நாள் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.50,000 ஆக உயர்த்துவது குறித்து நவம்பர் 30ஆம் தேதிக்குள் அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என ஆணையிட்டது.

ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையை செயல்படுத்த மறுத்து விட்ட தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி ஆணையரகம், இப்போதுள்ள ரூ.25,000 ஊதியம்தான் தொடர்ந்து வழங்கப்படும் என்று கடந்த 29ஆம் தேதி பிறப்பித்த ஆணையில் கூறியிருக்கிறது.

ரூ.50,000 ஊதியம் வழங்க முடியாது

அதற்காக கல்லூரிக் கல்வி ஆணையர் கூறியுள்ள காரணங்கள் அபத்தமானவை; ஏற்றிக்கொள்ள முடியாதவை. பல்கலைக்கழக மானியக்குழுவால்  வரையறுக்கப்பட்ட விதிமுறைகளின்படி கவுரவ விரிவுரையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதால் அவர்களுக்கு மானியக்குழு பரிந்துரைப்படி ரூ.50,000 ஊதியம் வழங்க முடியாது என அவர் கூறியுள்ளார்.

கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் உதவிப் பேராசிரியர்களாக நியமனம் செய்வதற்கு தேவையான கல்வித்தகுதி உள்ளது. அந்தத் தகுதிகளுடன் பல்கலைக்கழக மானியக் குழு வரையறுத்த விதிகளின்படி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அவர்கள் உதவிப்பேராசியர்களாக நியமிக்கப்பட்டிருப்பார்கள். அதற்கு கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படுவதை விட பல மடங்கு  ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆனால், கவுரவ விரிவுரையாளர்களுக்கு என்ன ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு கூறியிருக்கிறதோ, அதைத்தான் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கவுரவ விரிவுரையாளர்கள் கோருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றமும் அதைத்தான் தீர்ப்பில் கூறியிருக்கிறது. இல்லாத காரணங்களைக் கூறி சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த தமிழக அரசு மறுப்பது கவுரவ விரிவுரையாளர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.

மதிப்பூதியம் அல்ல.... அவமதிப்பூதியம்

பல்கலைக்கழக மானியக் குழுவின்படி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு மறுப்பது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே, இதுகுறித்த வழக்கில் கடந்த 21.03.2024ஆம் நாள் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் ‘‘கல்லூரி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் அளவுக்கு கல்வித்தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்களை  வேலைவாய்ப்பின்மையை பயன்படுத்திக் கொண்டு மிகக்குறைந்த ஊதியத்தில் அரசு பணியமர்த்தியுள்ளது.

மதிப்பூதியம் அல்ல.... அவமதிப்பூதியம்’ கவுரவ விரிவுரையாளர்களும் வேறு வழியின்றி கிடைக்கும் ஊதியத்தை ஏற்றுக் கொண்டு பணி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். உண்மையில் அவர்களுக்கு அரசு வழங்குவது மதிப்பூதியம் அல்ல.... அவமதிப்பூதியம்’’ என்று கூறியதுடன், பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்தவாறு கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. ஆனால், அதை அரசு ஏற்கவில்லை.

இந்தியாவிலேயே கவுரவ விரிவுரையாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் வழங்கும் மாநிலம் தமிழ்நாடுதான். 15 ஆண்டுகளுக்கு முன் ரூ.10,000 என்ற  ஊதியத்தில் பணியில் சேர்ந்த கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ரூ.25,000 என்ற நிலையை எட்டியது. அதையும் ஆண்டுக்கு ஒரு மாதம் வழங்க மறுப்பதும், மாதக் கணக்கில் நிலுவை வைப்பதும் நியாயமல்ல. தமிழக அரசே கவுரவ விரிவுரையாளர்களின் உழைப்பைச் சுரண்டக்கூடாது. சமூக நீதியில் தமிழக அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்தவாறு கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.50,000 வீதம் 12 மாதங்களும் ஊதியம் வழங்க வேண்டும்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Madurai Gun Shot: ஹாட்ரிக் அடித்த காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Madurai Gun Shot: ஹாட்ரிக் அடித்த காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
MS Dhoni:  நீ பொட்டு வச்ச தங்க குடம்! சேப்பாக்கில் மாஸ் என்ட்ரி கொடுத்த தோனி... மரண மாஸ் வீடியோ
MS Dhoni: நீ பொட்டு வச்ச தங்க குடம்! சேப்பாக்கில் மாஸ் என்ட்ரி கொடுத்த தோனி... மரண மாஸ் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chariot falls in Bangalore | ”தள்ளுங்க.. தள்ளுங்க சாய்து” சரிந்த 150 அடி ராட்சத தேர் பெங்களூருரில் கோர சம்பவம்Kaaraikudi Rowdy Murder  ஓட ஓட விரட்டி ரவுடி கொலை தந்தைக்காக பழிதீர்த்த திகில் கிளப்பும் CCTV காட்சிஅதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Madurai Gun Shot: ஹாட்ரிக் அடித்த காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Madurai Gun Shot: ஹாட்ரிக் அடித்த காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
MS Dhoni:  நீ பொட்டு வச்ச தங்க குடம்! சேப்பாக்கில் மாஸ் என்ட்ரி கொடுத்த தோனி... மரண மாஸ் வீடியோ
MS Dhoni: நீ பொட்டு வச்ச தங்க குடம்! சேப்பாக்கில் மாஸ் என்ட்ரி கொடுத்த தோனி... மரண மாஸ் வீடியோ
IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
Yogi babu: பிரபலத்துடன் வாரத்துக்கு 2 முறை வீடியோ கால் பேசும் யோகி பாபு! யார் அந்த பிரபலம்?
Yogi babu: பிரபலத்துடன் வாரத்துக்கு 2 முறை வீடியோ கால் பேசும் யோகி பாபு! யார் அந்த பிரபலம்?
"இந்து என சொல்வது வெட்கக்கேடான விஷயமல்ல" ஆர்.எஸ்.எஸ் சொன்னது என்ன?
Embed widget