மேலும் அறிய
Advertisement
Dejavu Trailer: மீண்டும் த்ரில்லர் ஜானர்.. அருள்நிதியின் தேஜாவு ட்ரெய்லரை வெளியிட்ட உதயநிதி..!
அருள்நிதி நடித்துள்ள தேஜாவு ட்ரெய்லரை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
அருள்நிதி நடித்துள்ள தேஜாவு ட்ரெய்லரை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையாவின் இணை தயாரிப்பில் அருள்நிதி நடித்துள்ள திரைப்படம் 'தேஜாவு'. இப்படத்தினை அறிமுக இயக்குனரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ளார். இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி வெங்கட், ராகவ் விஜய், சேத்தன், 'மைம்' கோபி, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
View this post on Instagram
இன்று இப்படத்தின் ட்ரெய்லரை நடிகரும், தயாரிப்பாளரும், சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். தொடர்ந்து ட்ரெய்லரை பார்த்த உதயநிதி படக்குழுவினருக்கு தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளாரான ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.சண்டை பயிற்சியாளராக பிரதீப் தினேஷும், கலை இயக்குனராக வினோத் ரவீந்திரனும் பணியாற்றியுள்ளனர். இத்திரைப்படம் உலகம் முழுவதும் வருகிற ஜுலை 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கடந்த ஜூலை 1 ஆம் தேதி அருள் நிதி நடிப்பில் டி பிளாக் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
பொது அறிவு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion