Ajith - Dayanidhi Azhagiri Viral Pic: ’சும்மாவா சொன்னாங்க அல்டிமேட்னு...’ - புகைப்படத்தை பகிர்ந்து அஜித்தை நெகிழ்ந்த தயாநிதி!
நடிகர் அஜித் - தயாநிதி அழகிரி குடும்பத்தினர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடிகர் அஜித், ஷாலினி, அவர்களது மகள் அனோஷ்கா ஆகியோருடன் தயாநிதி அழகிரியும், அவரது மனைவியும் உள்ள புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
வைரல் ஃபோட்டோ
இப்புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தயாநிதி அழகிரி, ”சும்மாவா சொன்னாங்க அல்டிமேட்னு.... அஜித்துடன் இருக்கும்போது நாம் பெரும் எனர்ஜி விவரிக்க முடியாத ஒன்று. இந்த மனிதரைப் பார்த்து நான் முற்றிலும் பிரம்மித்துப் போய் உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
chumma va sonnanga ULTIMATE ⭐️ nu! 🔥
— Dhaya Alagiri (@dhayaalagiri) May 27, 2022
that energy when he’s around cannot be explained. totally in awe of this man. 🤩#AjithKumar #Thala pic.twitter.com/YHmnEXEO13
மங்காத்தாவில் தொடங்கிய நட்பு
10 ஆண்டுகளுக்கு முன் அஜித் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றிபெற்ற திரைப்படம் மங்காத்தா. இப்படத்தை தயாநிதி அழகிரி தயாரித்த நிலையில், அப்படம் தொடங்கி அஜித்தும் தயாநிதி அழகிரியும் நல்ல நண்பர்களாக விளங்கி வருகின்றனர்.
நடிகர் அஜித்தின் கரியரில் மாறுபட்ட திரைப்படமாக அவரது ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். த்ரிஷா, அர்ஜூன், ஆண்ட்ரியா, பிரேம்ஜி, லட்சுமி ராய், வைபவ் என பெரும் நட்சத்திரக் கூட்டமே நடித்திருந்த இப்படத்துக்கு யுவன் இசையமைத்திருந்தார்.
10 Years of மங்காத்தா
முன்னதாக இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவுற்றதை சென்ற ஆண்டு ஜூன் மாதம் சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அப்போது படம் குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட தயாநிதி அழகிரி, '' 'மங்காத்தா' வெளியாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது வரை தல அஜித்துக்கு அப்படம் ஒரு சிறந்த ப்ளாக் பஸ்டராக இருந்து வருகிறது. தீவிர அஜித் ரசிகன் எதிர்பார்க்கும் அனைத்து விஷயங்களும் ‘மங்காத்தா’வில் இருந்தன.
ஸ்டைலிஷ் மேக்கிங், யுவனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையின் மாயாஜாலம், ஆக்ஷன், சென்டிமென்ட், காதல், எல்லாவற்றுக்கும் மேலாக தல அஜித்தின் கிளாஸ் மற்றும் மாஸ். நூற்றில் ஒரு படம் தான் நடிகர்கள், படக்குழுவினர், ரசிகர்கள், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க அதிபர்கள் என அனைவரையும் திருப்திப்படுத்தும். ‘மங்காத்தா’ அப்படியான அரிய ரத்தினங்களில் ஒன்று.
தயாரிப்பாளர் அல்ல ரசிகன்...
'மங்காத்தா' ஒரு உண்மையான ப்ளாக்பஸ்டர் என்று சொல்வதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. அப்படம் ரிலீஸ் ஆனது முதல் இன்று வரை இந்தப் பயணம் குறித்து நான் நினைத்துப் பார்க்கும்போது 'மங்காத்தா' அற்புதமாக இருந்து வருகிறது. பல்வேறு காரணங்களால் அது எனது இதயத்துக்கு நெருக்கமான படமாக இருக்கிறது.
எல்லாருக்கும் பிடித்தமான படங்களின் பட்டியலில் நிச்சயமாக 'மங்காத்தா' இடம்பெற்றிருக்கும். இந்த மைல்கல்லில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை ஒரு தயாரிப்பாளராக அல்லாமல் ஒரு ரசிகனாக உணரவைக்கும் படங்களில் 'மங்காத்தா'வும் ஒன்று'' எனத் தெரிவித்திருந்தார்.