மேலும் அறிய

TTF Vasan: யூ ட்யூப் பிரபலம் TTF வாசன் மீது கோவை காவல்துறையினர் வழக்குப்பதிவு.. காரணம் என்ன?

பிரபல யூடியூப் சேனல் பைக் ரைடர் டிடிஎஃப் வாசன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Twin throttlers என்ற யூடியூப் சேனலை கோவையை சேர்ந்த  TTF வாசன் என்ற இளைஞர் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த பைக்கை கொண்டு  சாகசங்கள் செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்துள்ளார். இந்தச் சூழலில் பிரபல யூட்யூபர் ஜி.பி.முத்து, TTF வாசன் உடன் இணைந்து அதிவேகமாக பைக் பயணம் மேற்கொண்டுள்ள வீடியோ கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. 

இந்நிலையில் TTF வாசன் மீது கோவை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பில், “கடந்த 14.09.2022ம் தேதி TTF வாசன் என்ற நபர், அவரது இரு சக்கர வாகனத்தில் Youtuber G.P. முத்து என்பவரை பின் சீட்டில் அமர வைத்து, கோவை மாநகரம், D3 போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பாலக்காடு மெயின் ரோடு, MDS பேக்கரி அருகே, அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாக வாகனத்தை ஓட்டி, அதை பதிவு செய்து, அவரது Twin Throttlers என்ற Youtube channelல் வீடியோ வெளியிட்டுள்ளார். இது சம்மந்தமாக, D3 போத்தனூர் காவல் நிலைய குற்ற எண். 582/2022 u/s 279 IPC, 184 MV Actல் மேற்படி TTF வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவருக்கு 20 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்கள் இருக்கும் நிலையில் கடந்த ஜூலை மாதம் தன்னுடைய பிறந்தநாளை கோவை தனியார் விடுதியில் தனது ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் கொண்டாடினார். அவருக்கு கூடிய கூட்டத்தை கண்டு பொதுமக்கள் மிரண்டனர். இணையத்தில் சரமாரியாக டிடிஎஃப் வாசன் மீது விமர்சனம் எழுந்தது. 

இவரது பைக் ஸ்டண்டுகள், நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டுவது என இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருப்பதாக சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்ட டிடிஎஃப் வாசன், தான் பயிற்சி எடுத்துக் கொண்டே இத்தகைய ஸ்டண்டுகளில் ஈடுபடுவதாகவும், அதிவேகமாக பைக் ஓட்டியதாக சொல்லப்பட்ட வீடியோ ஜமுனா ஹைவேஸ் சாலையில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனால் அப்பிரச்சனை முடிவுக்கு வந்ததாக நினைத்திருந்த நிலையில் மீண்டும் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

இவர் மீது ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டு காவல்துறை எச்சரிக்கை செய்தது அதையும் மீறி இதுபோல அதிவேகத்தை பைக்குகளை இயக்கி பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கிறார் தக்க நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். அதைத் தொடர்ந்து தற்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: சமந்தாவுக்கு என்னதான் ஆச்சு? இன்ஸ்டாவில் 2 மாசமா ஆளக்காணோம்..! வெளியான தகவல் இதுதான்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Announcement: சாதித்ததா அமெரிக்கா.? ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடும் ட்ரம்ப்...
சாதித்ததா அமெரிக்கா.? ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடும் ட்ரம்ப்...
’’அதிமுக உட்கட்சி பூசல்; திசைதிருப்பவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்’’ போட்டுத் தாக்கிய முதல்வர் ஸ்டாலின்!
’’அதிமுக உட்கட்சி பூசல்; திசைதிருப்பவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்’’ போட்டுத் தாக்கிய முதல்வர் ஸ்டாலின்!
ரூ போடுவதால் தமிழ் வளர்ந்துவிடுமா? வேரில் ஆசிட்; துளிருக்கு குடையா? ராமதாஸ் சரமாரிக் கேள்வி
ரூ போடுவதால் தமிழ் வளர்ந்துவிடுமா? வேரில் ஆசிட்; துளிருக்கு குடையா? ராமதாஸ் சரமாரிக் கேள்வி
Annamalai, Tamilisai Arrest: டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக போராட்டம்.. அண்ணாமலை, தமிழிசை கைது...
டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக போராட்டம்.. அண்ணாமலை, தமிழிசை கைது...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!AR Rahman : ”முன்னாள் மனைவினு சொல்லாதீங்க” ஆடியோ வெளியிட்ட சாய்ராபானு! இணையும் ரஹ்மான் தம்பதி?OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Announcement: சாதித்ததா அமெரிக்கா.? ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடும் ட்ரம்ப்...
சாதித்ததா அமெரிக்கா.? ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடும் ட்ரம்ப்...
’’அதிமுக உட்கட்சி பூசல்; திசைதிருப்பவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்’’ போட்டுத் தாக்கிய முதல்வர் ஸ்டாலின்!
’’அதிமுக உட்கட்சி பூசல்; திசைதிருப்பவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்’’ போட்டுத் தாக்கிய முதல்வர் ஸ்டாலின்!
ரூ போடுவதால் தமிழ் வளர்ந்துவிடுமா? வேரில் ஆசிட்; துளிருக்கு குடையா? ராமதாஸ் சரமாரிக் கேள்வி
ரூ போடுவதால் தமிழ் வளர்ந்துவிடுமா? வேரில் ஆசிட்; துளிருக்கு குடையா? ராமதாஸ் சரமாரிக் கேள்வி
Annamalai, Tamilisai Arrest: டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக போராட்டம்.. அண்ணாமலை, தமிழிசை கைது...
டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக போராட்டம்.. அண்ணாமலை, தமிழிசை கைது...
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்பு; என்சிஇடி தேர்வு பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்ட என்டிஏ!- என்ன தெரியுமா?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்பு; என்சிஇடி தேர்வு பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்ட என்டிஏ!- என்ன தெரியுமா?
BJP Vs EPS Vs Sengottaiyan: சுழன்றடிக்கும் பாஜக.. சுழலில் சிக்கிய இபிஎஸ்.. செங்கோட்டையன் கையில் அதிமுக.?
சுழன்றடிக்கும் பாஜக.. சுழலில் சிக்கிய இபிஎஸ்.. செங்கோட்டையன் கையில் அதிமுக.?
ADMK Resolution on Appavu: அப்பாவுவின் பதவி தப்புமா.? அதிமுக தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு...
அப்பாவுவின் பதவி தப்புமா.? அதிமுக தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு...
EPS Slams MK Stalin: 5 பட்ஜெட்டுமே UTTER FLOP.. சினிமா டயலாக் பேசாதீங்க.. முதல்வரை விமர்சித்த ஈபிஎஸ்
EPS Slams MK Stalin: 5 பட்ஜெட்டுமே UTTER FLOP.. சினிமா டயலாக் பேசாதீங்க.. முதல்வரை விமர்சித்த ஈபிஎஸ்
Embed widget