மேலும் அறிய

Director Shankar: இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம்.. நேரில் சென்று வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். 

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என்றழைக்கப்படுபவர் ஷங்கர். ஜென்டில்மேன் படம் இயக்குநராக அறிமுகமான அவர் காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி தி பாஸ், எந்திரன், நண்பன், ஐ, 2.0 என ஏகப்பட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர் போன்ற படங்களை இயக்கி வருகிறார். இதனிடையே ஷங்கருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளார். 

இதில் இளைய மகள் அதிதி ஷங்கர், விருமன் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக நடிகர் அதர்வாவின் தம்பி அறிமுகமாகும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவருடைய அக்கா ஐஸ்வர்யா சில ஆண்டுகளுக்கு முன் ரோஹித் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் சில காரணங்களால் இந்த தம்பதியினர் விவாகரத்து பெற்றனர். 

இதனையடுத்து சில கால இடைவெளிக்குப் பின் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாவது திருமணத்துக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றது. உதவி இயக்குநரான தருண் கார்த்திகேயன் தான் ஷங்கர் மகளை திருமணம் செய்துள்ளார். இவர்கள் திருமணம் இன்று மிக பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. முன்னதாக பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை அனைத்து பிரபலங்களையும் நேரில் சென்று சந்தித்து அழைப்பிதழ் வைத்தார் ஷங்கர். 

இந்நிலையில் இன்று நடைபெற்ற திருமணத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதுதொடர்பாக புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், “சென்னையில் நடைபெற்ற திரைப்பட இயக்குநர் சங்கர் அவர்களின் மகள் ஐஸ்வர்யா சங்கர் - தருண் கார்த்திகேயன் ஆகியோரது திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினேன்” என தெரிவித்துள்ளார். மணமக்களுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Mahindra BE 6 Formula E Edition: மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
Embed widget