மேலும் அறிய

Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. தளபதி மகனுக்கு இப்படி ஒரு நிலையா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பரஸ்பரம் நாங்கள் பேசி பிரிந்து விட்டோம். அந்த நேரம் நான் ரொம்ப வெறுமையாக உணர்ந்தேன் என காதல் தோல்வி குறித்து இயக்குநர் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

ஒன்றரை ஆண்டுகள் நீடித்த காதல் தோல்வியில் முடிந்த கதையை இயக்குநர் ஜேசன் சஞ்சய் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

தமிழக முதலமைச்சர் விஜயின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார். இந்த படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளார். இதனிடையே ஜேசன் சஞ்சய் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். அப்போது தன் வாழ்க்கையில் பொய் சொல்லி மாட்டிய சம்பவம் ஒன்றைப் பற்றி நினைவுக் கூர்ந்தார். 

போலீசில் மாட்டிய சம்பவம்

அதாவது கொரோனா காலக்கட்டத்தில் நாம் எல்லோரும் வீட்டிலேயே இருந்தோம். அப்போது என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. மண்டை காய்ந்து விட்டது. இதனால் நண்பர்களை போய் பார்த்தால் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும் என நினைத்தேன். அப்போது எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் மருத்துவருக்கான பாஸ் வைத்திருந்தார். அந்த பாஸ் ஒன்றை நான் திருடி என் காரில் ஓட்டி விட்டு கிளம்பி விட்டேன். ஸ்டெதஸ்கோப் போட்டால் மட்டுமல்ல என் தோற்றத்தைப் பார்த்தால் கூட யாரும் டாக்டர் என நம்ப மாட்டார்கள். நான் ஈசிஆரில் இருந்து பெசன்ட் நகர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது வழியில் என்னை காவல்துறையினர் மடக்கினார்கள். நான் மருத்துவருக்கான பாஸை காட்டியதும் மருத்துவம் தொடர்பான கேள்வி என்னிடம் கேட்டார்கள். அது எனக்கு புரியவில்லை. 

கொரோனா நேரத்தில் மாஸ்க் வேறு அணிந்ததால் அவர்களுக்கு அடையாளம் தெரியவில்லை. பின்னர் மாஸ்க் கழற்றியதும் விஜய் மகன் என அடையாளம் தெரிந்து விட்டது. அவர்கள் தெரியாத மாதிரி உங்க அப்பா என்ன பண்றாங்க என கேட்க, நானும் ஷிப்பிங் பிசினஸ் பண்ணுகிறார் என பதில் சொன்னேன். பின்னர் நீலாங்கரையின் என் வீட்டு முகவரியை சொல்லவும் நான் மாட்டிக் கொண்டதை உணர்ந்தேன். பின் எதுவும் சொல்லாமல் வீட்டுக்கு போலீசார் திருப்பி அனுப்பினர். என்னுடன் வந்த கார் ஓட்டுநர் வீட்டில் இந்த விஷயத்தை சொல்லி விட்டார். அதைக் கேட்டு வீட்டில் ஜாலியாக சிரித்தார்கள். பாவம் நீயும் எத்தனை நாட்கள் தான் வீட்டுக்குள்ளேயே இருக்க முடியும் என கூறினார்கள். நானும் போலீசாரும் நடத்திய அந்த உரையாடல் மறக்க முடியாதது. இதை என் தங்கையிடம் நடித்து காட்டினேன் என ஜேசன் தெரிவித்துள்ளார். 

காதல் தோல்வி 

அடுத்ததாக காதல் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, நான் லண்டனில் கல்லூரி படிக்கும்போது ஒரு பெண்ணுடன் காதல் இருந்தது உண்மை தான். கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகள் அந்த உறவு நீடித்தது. அதன்பிறகு பரஸ்பரம் நாங்கள் பேசி பிரிந்து விட்டோம். அந்த நேரம் நான் ரொம்ப வெறுமையாக உணர்ந்தேன். யுவன் சங்கர் ராஜாவின் சோக பாடல்களை கேட்பேன். எனக்கும் கொஞ்சம் ஈகோ இருப்பதால் மீண்டும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என விலகியே இருந்தேன். இப்போது யோசித்தால் அப்படி முடிவு எடுத்தது நல்லது என்றே தோன்றுகிறது என இயக்குநர் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajinikanth:
Rajinikanth:"பத்து பதினஞ்சு வருஷம் சந்தோஷமா வாழ்ந்துருவேன்னு சொன்னாரே".! தேவா குறித்து ரஜினி உருக்கமான ப்ளாஸ்பேக்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ
அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Embed widget