வான்வழித் தாக்குதல்களில் 50-க்கும் மேற்பட்டோர் பலியான சோகம்! - எங்கு நடந்தது? பின்னணி என்ன?
அரசுப்படைகளுக்கும், ஆயுதக்குழுவினருக்கும் இடையே நடைபெற்று வரும் உள்நாட்டுப்போரில் இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் தகவல்

மியான்மரில் நடைபெற்ற வான்வழித் தாக்குதல்களில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மியான்மரில் நடப்பது என்ன?
மியான்மரில் மின் ஆங் ஹ்லைங் (Min Aung Hlaing) தலைமையிலான ராணுவ ஆதரவு அரசாங்கம் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2021 ஆம் ஆண்டு பிப்ரவரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியைப் பிடித்த முன்னாள் ராணுவத் தளபதியான மின் ஆங் ஹ்லைங், 2026 -ஆம் ஆண்டு முதல் மியான்மரின் அதிபராகப் பதவியேற்றார். இந்நிலையில் அந்நாட்டில் அரசுப்படைகளுக்கும், ஆயுதக்குழுவினருக்கும் இடையே நடைபெற்று வரும் உள்நாட்டுப்போரில் இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
50-க்கும் மேற்பட்டோர் பலி
இந்நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சந்தை மற்றும் திருமண மண்டபம் ஒன்றின் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், மொத்தமாக 50-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. ராகினி, கரினி உள்ளிட்ட மாகாணங்களில் கிளர்ச்சியாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மியான்மரில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சி மற்றும் மக்கள் மீதான தாக்குதல்களுக்கு பல்வேறு உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்























