மேலும் அறிய

Citadel Priyanka Chopra: ஸ்பை உலகில் பிரியங்கா சோப்ரா.... 2-வது மெகா பட்ஜெட் சீரிஸ்... அதிரடி தமிழ் ட்ரெய்லர் வெளியீடு!

ஆறு எபிசோட்களைக் கொண்ட இந்த சீரிஸ் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ள சீட்டடெல் (Citadel) வெப் சீரிஸின் தமிழ் ட்ரெய்லர் வெளியாகி கவனமீர்த்துள்ளது. 

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம், தனுஷ் நடித்த த க்ரே மேன் படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குநர்களான ரூசோ பிரதர்ஸ் இந்த சீரிஸை இயக்கியுள்ளனர்.

கேம் ஆஃப் த்ரோன்ஸில் நடித்த ரிச்சர்ட் மேடன், பாலிவுட் தொடங்கி ஹாலிவுட் சென்று கலக்கி வரும் நடிகை பிரியங்கா சோப்ரா இருவரும் இந்தத் தொடரில் இணைந்து நடித்துள்ளனர். ஹாலிவுட்டின் பல பிரபல சீரிஸ்களின் ஸ்பின் ஆஃப் ஆக இந்த சீரிஸ் வெளியாகவுள்ளது

சீரிஸ் உலகில் இதுவரை மிகப்பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இரண்டாவது சீரிஸ் எனும் பெருமையைப் பெற்றுள்ள சீட்டடெல், 250 மில்லியன் டாலர்கள் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக, அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ளது.

ஆறு எபிசோட்களைக் கொண்ட இந்த சீரிஸ் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஏப்ரல் 28ஆம் தேதி முதல் இரண்டு எபிசோடுகள், பின் வெள்ளிக்கிழமை தோறும் எபிசோட் என மே 26ஆம் தேதி வரை இந்த சீரிஸ் வெளியிடப்பட உள்ளது.

 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த சீரிஸின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தங்களை அடையாளங்களை மறந்த  உளவாளிகளான பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேடன் இருவரைச் சுற்றி நிகழும் அறிவியல் புனைவு கதையாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

சீட்டடெல் சீரிஸின் இந்திய வெர்ஷனில் நடிகர் வருண் தவான் மற்றும் நடிகை சமந்தா நடித்து வரும் நிலையில், த ஃபேமிலி மேன் புகழ் இயக்குநர்கள் ராஜ் அண்ட் டிகே இயக்கி வருகின்றனர். முன்னதாக சமந்தா, வருண் தவான் இடம்பெற்றிருக்கும் சீட்டடெல் போஸ்டர்கள் வெளியாகி கவனமீர்த்தன. இதேபோல் இத்தாலி, ஸ்பெய்ன் மற்றும் மெக்ஸிகோவிலும் தனித்தனி பதிப்புகள் வரவுள்ளன.

பல்வேறு இந்திய மொழிகளில் சீட்டடெல் சீரிஸ் வெளியாகும் நிலையில், முன்னதாக தமிழ் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகிறது.

மேலும் படிக்க: Krishnamoorthy about Vadivelu: தவசி படத்தின் எவர்க்ரீன் காமெடி உருவானது எப்படி? கிருஷ்ணமூர்த்தி - வடிவேலு காம்போ? த்ரோ பேக் இன்டர்வியூ

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget