Ranveer Singh: 3-வது படமும் ஃப்ளாப்.. ஆட்டம் காணும் ரன்வீர் சிங்கின் மார்க்கெட்.. மரண அடி வாங்கும் பாலிவுட்!
சென்ற வாரம் வெளியான ’சர்க்கஸ்’ படம் இதுவரை 23 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. ரன்வீர் சிங்கின் முந்தைய படங்களான 83, ‘ஜெயேஷ்பாய் ஜோர்டார்’ வரிசையில் இந்த படமும் தோல்வியை தழுவியுள்ளது.
2022 தொடக்கம் முதலே பாலிவுட் சினிமா இறங்குமுகத்தில் பயணித்து வரலாறு காணாத தோல்வி படங்களை வழங்கி வந்த நிலையில், ரன்வீர் சிங்- ரோஹித் ஷெட்டி கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான திரைப்படமும் பாக்ஸ் ஆஃபிஸ் தோல்வியைத் தழுவியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு தென்னிந்திய சினிமாக்கள் பெரும் கவனமீர்த்து நல்ல வசூலையும் விமர்சனங்களையும் பெற்றுள்ள சூழலில், மற்றொரு புறம் பாலிவுட் சினிமா வரலாறு காணாத வீழ்ச்சியைக் கண்டு கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியது.
அதே போல, உலக அரங்கில் இந்திய சினிமாக்களின் பிரநிதியாக விளங்கி வந்த பாலிவுட் சினிமா இந்த ஆண்டு வசூலில் பெரிய அளவில் மண்ணைக் கவ்வியது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. சமூக வலைதளங்களில் பாலிவுட்டுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக பாலிவுட் வட்டாரங்கள் வாதங்களை முன்வைத்தாலும், விமர்சனரீதியாகவும் இந்த ஆண்டு பாலிவுட் படங்கள் பெரும்பாலும் சினிமா ரசிகர்களின் மனதைக் கவர தவறிவிட்டது என்றே சொல்லலாம்.
2022 has been a year of content for indian cinema🎬
— Supertramp (@Cine_vichaar) December 26, 2022
Films like #Kantara #TheKashmirFiles #Daman became successful despite its average budget.
Regional films like #RRR #KGF2 & #PushpaTheRise shook the Box office.
and Bollywood films like #Cirkus with big names failed to impress pic.twitter.com/oY0nSPRr8t
பாலிவுட்டின் டாப் நடிகரான அமீர் கான், எத்தகைய சூழலில் மார்க்கெட்டைத் தக்கவைத்த அக்ஷய் குமார், கங்கனா ரனாவத் தொடங்கி பலரது படங்களும் படுதோல்வியைத் தழுவின.
இந்த பட்டியலில் தற்போது பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்வீர் சிங்கும் இணைந்துள்ளார். பாலிவுட்டில் தரமான கமர்ஷியல் பட இயக்குநராகக் கருதப்படும் ரோஹித் ஷெட்டி- ரன்வீர் சிங் கூட்டணியில் சென்ற வாரம் வெளியான சர்க்கஸ் படம் எதிர்பார்ப்புக்கு மாறாக குறைவான வசூலையே குவித்துள்ளது. சென்ற வாரம் வெளியான ’சர்க்கஸ்’ படம் இதுவரை 23 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது.
#Cirkus scores a low weekend at the box office in India
— Himesh (@HimeshMankad) December 26, 2022
Friday: 6.25 crore
Saturday: 6.40 crore
Sunday: 7.50 crore (Estimate)
Total: 20.15 crore
இந்நிலையில் ரன்வீர் சிங்கின் முந்தைய படங்களான 83, ‘ஜெயேஷ்பாய் ஜோர்டார்’ வரிசையில் இந்தப் படமும் தோல்வியைத் தழுவியுள்ளது. பாலிவுட்டில் தன் தனித்துவ நடிப்பால் தனி இடம் பிடித்த ரன்வீர் சிங்கின் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருவது ஏற்கெனவே தோல்வியும் சுழலும் பாலிவுட் வட்டாரத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது.