Cinema Headlines: தங்கல் பட நடிகை உயிரிழப்பு: விஜய், சிவகார்த்திகேயனுக்கு குவியும் வாழ்த்துகள்: சினிமா செய்திகள் இன்று!
Cinema Headlines: தமிழ் திரையுலகில் இன்று நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளைப் பற்றி காணலாம்.
கம்பேக் கொடுத்தாரா ஜெயம் ரவி! சைரன் முதல் நாள் வசூல் நிலவரம் எப்படி?
ஜெயம் ரவி நடித்து நேற்று பிப்ரவரி 16 ஆம் தேதி வெளியான சைரன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய் குமார் தயாரிப்பில், நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் படம் நேற்று பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ உள்ளிட்டப் படங்களில் திரைக்கதை எழுத்தில் பணியாற்றிய அந்தோணி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். மேலும் படிக்க
குழந்தை நட்சத்திரம் முதல் தளபதி வரை! 40 ஆண்டுகளை நிறைவு செய்த விஜய்!
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர். 1984ம் ஆண்டு விஜயகாந்த், விஜி, அனுராதா, ஒய்.ஜி.மகேந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ்.எஸ். சந்திரன் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் 'வெற்றி'. இப்படத்தில் தான் நடிகர் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். நடிகர் விஜயகாந்தின் குழந்தை பருவத்து கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. மேலும் படிக்க
அமீர் கான் மகளாக நடித்த தங்கல் பட நடிகை உயிரிழப்பு: அதிர்ச்சியில் பாலிவுட்!
நடிகர் அமீர் கான் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு மல்யுத்தத்தை அடிப்படையாக வைத்து வெளியாகி, பாலிவுட் தாண்டி நாடு முழுவதும் சக்கைபோடு போட்ட திரைப்படம் ‘தங்கல்’. இப்படத்தில் தன் பெண் பிள்ளைகளுக்கு மல்யுத்தப் பயிற்சி சொல்லித்தரும் ஸ்ட்ரிக்ட்டான அப்பாவாக நடிகர் அமீர் கான் நடித்திருப்பார். அமீர் கானைத் தாண்டி இப்படத்தின் அவரது மகள்களாக நடித்த ஃபாத்திமா சனா சேக், சான்யா மல்ஹோத்ரா ஆகிய நடிகைகள் ஸ்கோர் செய்து பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றனர். மேலும் படிக்க
12 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி! குட்டி தளபதி சிவகார்த்திகேயன் பிறந்தநாள் இன்று!
சின்னத்திரை டூ வெள்ளித்திரை பயணம் செய்த எத்தனையோ நடிகர்களை இந்த தமிழ் சினிமா கடந்து வந்துள்ளது. ஆனால் அப்படி பயணித்த அனைவராலும் ஹீரோ அந்தஸ்தை பெற்று விட முடியுமா? என்றால் அதன் சதவீதம் சற்று குறைவு தான். ஆனால் சின்னத்திரையில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு கிட்டத்தட்ட பன்னிரெண்டு ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்ற அந்தஸ்தை பெரும் அளவுக்கு உயர்ந்து, அடுத்த விஜய் என ரசிகர்களால் கொண்டாடப்படும் அளவுக்கு அசுர வளர்ச்சி அடைந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும் படிக்க
நயன்தாரா ஜோடியாகும் டாடா கவின்? கைகோர்க்கும் வெற்றிமாறன்: எந்தப் படம் தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் அறிமுகமான கவின், தற்போது தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக உருவாகியுள்ளார். கடந்த ஆண்டு வெளியான டாடா படம் அவருக்கு பெரிய வரவேற்பைக் கொடுத்த நிலையில், தற்போது அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவருக்கு அமைந்து வருகின்றன. ‘பியார் பிரேம காதல்' படத்தை இயக்கிய இளன் இயக்கும் ஸ்டார் படத்தில் தற்போது கவின் நடித்து வருகிறார். மேலும் படிக்க
இவரு லிஸ்ட்லயே இல்லையே: விஜய்யின் கடைசி படத்தை இயக்கும் போட்டியில் இணைந்த தெலுங்கு இயக்குநர்!
நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தை வெற்றிமாறன், கார்த்திக் சுப்பராஜ் இயக்கவிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் கடைசி படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க இருப்பதாக முதலில் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து எச். வினோத் அல்லது வெற்றிமாறன் இந்தப் படத்தை இயக்கலாம் என்று தகவல் வெளியானது. தற்போது இந்தப் பட்டியலில் மற்றொரு இயக்குநர் இணைந்துள்ளார். மேலும் படிக்க