மேலும் அறிய

HBD Sivakarthikeyan: 12 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி! குட்டி தளபதி சிவகார்த்திகேயன் பிறந்தநாள் இன்று!

HBD Sivakarthikeyan : 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியின் போட்டியாளர் முதல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் வரை 12 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்துள்ள சிவகார்த்திகேயன் சினிமா பயணம்.

சின்னத்திரை டூ வெள்ளித்திரை பயணம் செய்த எத்தனையோ நடிகர்களை இந்த தமிழ் சினிமா கடந்து வந்துள்ளது. ஆனால் அப்படி பயணித்த  அனைவராலும் ஹீரோ அந்தஸ்தை பெற்று விட முடியுமா? என்றால் அதன் சதவீதம் சற்று குறைவு தான். ஆனால் சின்னத்திரையில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு கிட்டத்தட்ட பன்னிரெண்டு ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்ற அந்தஸ்தை பெரும் அளவுக்கு உயர்ந்து, அடுத்த விஜய் என ரசிகர்களால் கொண்டாடப்படும் அளவுக்கு அசுர வளர்ச்சி அடைந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை  சிவா அண்ணன், நம்ம வீட்டு பையன் என செல்லமாக கொண்டாடும் சிவகார்த்திகேயனின் 39வது பிறந்தநாள் இன்று. 

 

HBD Sivakarthikeyan: 12 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி! குட்டி தளபதி சிவகார்த்திகேயன் பிறந்தநாள் இன்று!

விஜய் டிவியில் துவங்கிய பயணம் : 

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியின் ஆடிஷனுக்கே வீட்டுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக வந்து செலக்டான அந்த தருணத்தில் இருந்தே சிவகார்த்திகேயன் வெற்றியின் முதல் படியில் அடி எடுத்து வைத்தார். போட்டியாளராக இருந்து தொகுப்பாளரானார். பல ரியாலிட்டி ஷோ, அவார்டு ஷோ என தொகுத்து வழங்கி வந்தார். அதற்கு பிறகு மெரினா, 3 படம் மூலம் சினிமா பயணத்தை இனிதே துவங்கினார்.

வாய்ப்பை வெற்றியாக்கிய எஸ்.கே :  

மெல்ல மெல்ல அவரின் நடிப்பு திறன் வெளிப்பட அதை தயாரிப்பாளர்கள் சரியான முறையில் பயன்படுத்தி கொண்டனர். மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என படிப்படியாக தனக்கென ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொண்டார். பெரிய பட்ஜெட் படங்கள் வந்து குவியும் அளவுக்கு உயர துவங்கினார். கனா, டான், டாக்டர் என அடுத்தடுத்து 100 கோடி வசூல் செய்யும் அளவுக்கு வெற்றி படங்களை கொடுத்து திக்குமுக்காட வைத்தார். 

 

HBD Sivakarthikeyan: 12 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி! குட்டி தளபதி சிவகார்த்திகேயன் பிறந்தநாள் இன்று!

அசுர வளர்ச்சி : 

தற்போது 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சிவகார்த்திகேயன் பயணித்து வந்த பாதை வெகு தூரம் என்றாலும் அதை அவர் மிகவும் குறுகிய காலகட்டத்திலேயே எட்டிவிட்டார். இந்த ஆண்டு துவக்கமே சிவகார்த்திகேயனுக்கு சரவெடி பொங்கலாக 'அயலான்' அமைந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது கமல்ஹாசனின் தயாரிப்பில் ஒரு படம், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் ஒரு படம் என படு பிஸியாக சுழன்று வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். 

அடுத்த விஜய் :

இடைப்பட்ட காலத்தில் ஒரு சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும் தூணில் அடிபட்ட பந்தை போல மிகவும் வேகமாக பவுன்ஸ் பேக் செய்து கலக்கி வருகிறார். சவாலான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து படத்திற்கு படம் வித்தியாசம் காட்டுவது எஸ்.கேவின் தனிச்சிறப்பு. நடிகர் விஜய் அரசியலில் கவனம் செலுத்த இருக்கும் நிலையில் அடுத்த விஜய் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் சிவகார்த்திகேயனுக்கு இந்த பிறந்தநாளில் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள். 

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Stalin's Plan for Senthil Balaji: செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு - ஒர்க்அவுட் ஆகுமா தேர்தல் ஸ்கெட்ச்.?
செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு - ஒர்க்அவுட் ஆகுமா தேர்தல் ஸ்கெட்ச்.?
John Spencer on Operation Sindoor: நவீன யுகத்தின் தீர்க்கமான வெற்றி ‘ஆபரேஷன் சிந்தூர்‘ - அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி புகழாரம்
நவீன யுகத்தின் தீர்க்கமான வெற்றி ‘ஆபரேஷன் சிந்தூர்‘ - அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி புகழாரம்
TN 10th Result 2025: முன்கூட்டியே 10ஆம் வகுப்புத் தேர்வு தேர்வு முடிவுகள்! மே 16-ல் வெளியீடு- 11ஆம் வகுப்புக்கு எப்படி?
TN 10th Result 2025: முன்கூட்டியே 10ஆம் வகுப்புத் தேர்வு தேர்வு முடிவுகள்! மே 16-ல் வெளியீடு- 11ஆம் வகுப்புக்கு எப்படி?
ADMK NTK Alliance: சீனுக்கு வந்த EPS..  சீமானின் பக்கா ஸ்கெட்ச்.  அதிமுக- நாதக கூட்டணி?
ADMK NTK Alliance: சீனுக்கு வந்த EPS.. சீமானின் பக்கா ஸ்கெட்ச். அதிமுக- நாதக கூட்டணி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சீனுக்கு வந்த EPS! சீமானின் பக்கா ஸ்கெட்ச்! அதிமுக- நாதக கூட்டணி?செந்தில் பாலாஜிக்கு பொறுப்பு! டிக் அடித்த ஸ்டாலின்! திமுகவின் கொங்கு கணக்குஸ்கெட்ச் போட்டு தூக்கிய கம்பீர் இனி கேட்க ஆளே இல்ல இந்திய அணியின் POWERFUL COACH Gautam Gambhir’’ரொம்ப கஷ்டமா இருக்கு’’ஓய்வை அறிவித்த விராட்ஷாக்கான BCCI, ரசிகர்கள்! | Virat Kohli Retirement Annoucement

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin's Plan for Senthil Balaji: செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு - ஒர்க்அவுட் ஆகுமா தேர்தல் ஸ்கெட்ச்.?
செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு - ஒர்க்அவுட் ஆகுமா தேர்தல் ஸ்கெட்ச்.?
John Spencer on Operation Sindoor: நவீன யுகத்தின் தீர்க்கமான வெற்றி ‘ஆபரேஷன் சிந்தூர்‘ - அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி புகழாரம்
நவீன யுகத்தின் தீர்க்கமான வெற்றி ‘ஆபரேஷன் சிந்தூர்‘ - அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி புகழாரம்
TN 10th Result 2025: முன்கூட்டியே 10ஆம் வகுப்புத் தேர்வு தேர்வு முடிவுகள்! மே 16-ல் வெளியீடு- 11ஆம் வகுப்புக்கு எப்படி?
TN 10th Result 2025: முன்கூட்டியே 10ஆம் வகுப்புத் தேர்வு தேர்வு முடிவுகள்! மே 16-ல் வெளியீடு- 11ஆம் வகுப்புக்கு எப்படி?
ADMK NTK Alliance: சீனுக்கு வந்த EPS..  சீமானின் பக்கா ஸ்கெட்ச்.  அதிமுக- நாதக கூட்டணி?
ADMK NTK Alliance: சீனுக்கு வந்த EPS.. சீமானின் பக்கா ஸ்கெட்ச். அதிமுக- நாதக கூட்டணி?
தமிழ்நாட்டில் உக்கிரமாகப் போகும் போர்.. ஸ்கெட்ச் போடும் அரசியல் கட்சிகள்.. எல்லாம் ஓட்டுக்குத்தான்
தமிழ்நாட்டில் உக்கிரமாகப் போகும் போர்.. ஸ்கெட்ச் போடும் அரசியல் கட்சிகள்.. எல்லாம் ஓட்டுக்குத்தான்
Donald Trump: இந்தியா-பாக் பதற்றம் ”போரை நிறுத்தியதே நான் தான்” மீண்டும் மார்தட்டிக்கொண்ட டிரம்ப்
Donald Trump: இந்தியா-பாக் பதற்றம் ”போரை நிறுத்தியதே நான் தான்” மீண்டும் மார்தட்டிக்கொண்ட டிரம்ப்
8ம் வகுப்பு மாணவனை குத்திக் கொலை செய்த 6ம் வகுப்பு மாணவன்! என்னய்யா சொல்றீங்க?
8ம் வகுப்பு மாணவனை குத்திக் கொலை செய்த 6ம் வகுப்பு மாணவன்! என்னய்யா சொல்றீங்க?
சிறுவனின் மூளைக்குள் இறங்கிய கத்தி.. 2 மணி நேரத்தில் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள் - சேலத்தில் சாதனை
சிறுவனின் மூளைக்குள் இறங்கிய கத்தி.. 2 மணி நேரத்தில் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள் - சேலத்தில் சாதனை
Embed widget