மேலும் அறிய
Advertisement
Cinema Headlines: இந்தியன் 2 அப்டேட்! கொலை செய்யப்பட்ட ஹாலிவுட் நடிகர் - இன்றைய சினிமா செய்திகள்
Cinema Headlines: சினிமா வட்டாரங்களில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ!
- கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படம் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா, மாரி முத்து, மனோபாலா, நெடுமுடி வேணு என பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் 2ஆம் பாடல் மே 29 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீடு ஜூன் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும் படிக்க
- விஜய் நடித்து வரும் the greatest of all time படத்தில் ஏற்கனவே விஜய் ஒரு பாடல் பாடிய நிலையில், இன்னும் ஒரு பாடல் பாட உள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இந்த பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக இப்படத்தை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
- பிரபல நடிகர் ஜானி வாக்டர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஹாலிவுட் திரையுலகத்தை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 25 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. பார் ஒன்றுக்கு சென்றிருந்த அவரது காரில் திருட்டு முயற்சி நடந்த நிலையில், கொள்ளையர்கள் ஜானி வாக்டரை சுட்டுக்கொன்றுள்ளனர். அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க
- பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் சூர்ய பிரகாஷ் மாரடைப்பால் இன்று காலமானார். ராஜ்கிரண் நடித்த மாணிக்கம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் தொடர்ந்து பொன் ஒன்று கண்டேன், மாயி, திவான், அதிபர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். சூர்ய பிரகாஷ் மறைவுக்கு நடிகர் சரத்குமார், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க
- தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனம் தயாரிக்கும் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். ஓராண்டாகியும் இப்படம் தொடர்பான பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் விஜய்யின் நெருங்கிய நண்பரான நடிகர் ஸ்ரீமன் ஜேசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், அப்பாவும் உன் வயதில் நுழைந்தார். சஞ்சய் நன்கு பயிற்சி பெற்று தன்னை ட்யூன் செய்துகொண்டார். சீக்கிரம் அடித்து ஆடுவார்” என கூறியுள்ளார். மேலும் படிக்க
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion