சொந்த குடும்பத்து பெண்களை இப்படியா அவமானப்படுத்துவது...நடிகர் சிரஞ்சீவிக்கு கண்டனங்கள்
தனது வீட்டில் அடுத்தடுத்து பெண் குழந்தைகள் மட்டுமே பிறப்பது ஏதோ லேடீஸ் ஹாஸ்டலில் வாழ்வது போல இருப்பதாக நடிகர் சிரஞ்சீவி சொன்ன கருத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன

சிரஞ்சீவி
தெலுங்கு திரையுலகில் மெகாஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் சிரஞ்சீவி. கடந்த 45 ஆண்டுகளாக தெலுங்கு , இந்தி , கன்னட ஆகிய மொழிகளில் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எளிமையான குடும்பத்தில் இருந்து வந்து இன்று தனக்கேன ஒரு ரசிக சாம்ராஜியத்தையே உருவாக்கியவர் சிரஞ்சீவி. நந்தி , ரகுபதி வெங்கையா விருது , 7 பிலிம்ஃபேர் விருதுகள் , பத்மபூஷன் என பல விருதுகளை குவித்துள்ளார். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். மேலும் சுஷ்மிதா , ஶ்ரீஜா என சிரஞ்சீவிக்கு இரு மகள்களும் உள்ளார்கள்.
சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை
சமீபத்தில் சிரஞ்சீவி பிரம்ம ஆனந்தம் என்கிற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய சிரஞ்சீ தனது குடும்பத்தில் அடுத்தடுத்து பெண் குழந்தைகள் மட்டுமே பிறப்பது குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய சிரஞ்சீவி " நான் வீட்டில் இருக்கும்போது என் பேத்திகளுடன் இருப்பது மாதிரி இல்லை. ஏதோ லேடீஸ் ஹாஸ்டல் வார்டன் மாதிரி ஃபீல் ஆகிறது. என்னைச் சுற்றி எல்லா பக்கமும் லேடீஸ் மட்டும்தான் இருக்கிறார்கள். என் வம்சம் தொடர ஒரு பெண் குழந்தை பெற்று தரும்படி மகன் ராம் சரணிடம் கேட்கிறேன். அவனுக்கு இன்னொரு பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. " என சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
Dear Chiranjeevi garu,
— Sudhakar Udumula (@sudhakarudumula) February 12, 2025
I have respect for you as an actor. However, I would appreciate some clarification on your recent statement.
It came across as misogynistic and seemed to imply that a legacy can only be carried forward by a male child or men. Did you truly mean to suggest… pic.twitter.com/2ylwxsSXut
சிரஞ்சீவியின் கருத்திற்கு சமூக வலைதளங்களில் பெரும் எதிப்புகள் கிளம்பியுள்ளன. ஆண் குழந்தைகளை உயர்த்தியும் பெண் குழந்தைகளை தாழ்த்தியும் சிரஞ்சீவி பேசியுள்ளதாக பலர் அவரது கருத்திற்கு கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

