Chellamma Serial Arnav: அவள முதல்ல விரட்டுங்க.. டிப்ஸ் கொடுத்த செல்லம்மா சீரியல் ரசிகர்கள்.. நெகிழ்ந்து போன அர்னவ்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லம்மா சீரியல் ஹீரோ அர்னவிடம் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பினர்.
![Chellamma Serial Arnav: அவள முதல்ல விரட்டுங்க.. டிப்ஸ் கொடுத்த செல்லம்மா சீரியல் ரசிகர்கள்.. நெகிழ்ந்து போன அர்னவ்! Chellamma serial fans asks some questions to Arnaav about the serial in the shooting spot Chellamma Serial Arnav: அவள முதல்ல விரட்டுங்க.. டிப்ஸ் கொடுத்த செல்லம்மா சீரியல் ரசிகர்கள்.. நெகிழ்ந்து போன அர்னவ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/20/ca74752f9ddd40a6f941811953d7d1591671534110941224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லம்மா சீரியலில் நடித்து வரும் நடிகர் அர்னவிடம் ஷூட்டிங் ஸ்பாட்டில் சின்னத்திரை ரசிகர்கள் சிலர் சில கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த செவ்வந்தி சீரியல் ஹீரோயின் திவ்யா ஸ்ரீதருக்கும் - அர்னவிற்கும் திருமணம் சமீபத்தில் தான் நடைபெற்றது. லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர்களுக்கிடையே திருமணம் முடிந்த பிறகு ஏராளமான கருத்து வேறுபாடுகள் மூண்டது;
அதற்கு இடையில் கர்ப்பிணியாக இருந்த திவ்யாவை அர்னவ் அடித்ததாகவும், துன்புறுத்தியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு பெரும் சர்ச்சையில் சிக்கினார் அவர். பெரிய அளவில் பிரபலமாகாமல் இருந்த செல்லம்மா தொடர் இந்த சர்ச்சைக்கு பிறகு வெளியில் தெரிய ஆரம்பித்தது. சர்ச்சையில் சிக்கியிருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையே பெற்றிருந்தார் அர்னவ்.
மும்மரமாக நகரும் செல்லம்மா :
இந்த சீரியலில் செல்லம்மாவை ஒரு தலையாக காதலிக்கிறார் அர்னவ். அவருக்கும் அவரின் மாமன் மகளாக மேகாவிற்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இருப்பினும் செல்லம்மாவை தான் திருமணம் செய்து கொள்வேன் என ஒற்றை காலில் நிற்கிறார் சித்துவாக நடிக்கும் அர்னவ். இந்த சீரியலில் மேகாவாக நடிக்கிறார் பக்யலக்ஷ்மி புகழ் திவ்யா கணேஷ்.
வில்லியாக நடிக்க மிகவும் ஆசைப்பட்ட இவர் தற்போது சீரியலில் இருந்து விலகியுள்ளார். என்னை சரியாக என்னுடைய வேலையை செய்ய விடாமல் தடுக்கிறார்கள், பிரச்சினை செய்கிறார்கள் என ஏற்கனவே அவர் கூறியுள்ளார்; தற்போது அவரின் கதாபாத்திரத்தில் நடிக்க வேறு ஒருவர் மாற்றப்பட்டுள்ளார். சித்து - மேகா திருமண ஏற்பாடுகள் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருவதால் இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டு இருக்கிறது.
View this post on Instagram
ரசிகர்கள் வேண்டுகோள் :
செல்லம்மா சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது அர்னவுடன் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளனர் செல்லம்மா சீரியலின் தீவிர ரசிகர்கள். அவர்கள் சீரியலில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என சில ஆலோசனைகளை அர்னவிடம் கூறியுள்ளனர். சீக்கிரமாக செல்லம்மாவை திருமணம் செய்து கொள்ளுங்கள். அந்த மேகாவை சீக்கிரமாக வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிடுங்கள். சீரியலில் உங்கள் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. பலரும் மிகவும் சிறப்பாக நடிக்கிறார்கள் என அவர்களின் பாராட்டுகளை தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)