Chandrayaan 3 Success: வைரமுத்து கவிதை முதல் சிரஞ்சீவி வாழ்த்து வரை... நிலவில் தரையிறங்கிய சந்திரயான்.. பூரிக்கும் பிரபலங்கள்..
நிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சி செய்யும் நோக்கில் கடந்த மாதம் 14ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
சந்திராயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமான தரையிறக்கப்பட்ட நிலையில், திரைப் பிரபன்ங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சி செய்யும் நோக்கில் கடந்த மாதம் 14ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
40 நாட்கள் பயண திட்டத்தின்படி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் இன்று மாலை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட்டது. இன்று இந்திய நேரப்படி மாலை 6.04 மணிக்கு லேண்டர் தரையிறக்கப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் வகையிலான இந்நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில் திரைத்துறையினர் பலரும் இஸ்ரோவுக்கும் சந்திரயான் 3க்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
"பூமிக்கும் நிலவுக்கும்
விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது
இந்தியா
ரஷ்யா அமெரிக்கா சீனா
என்ற வரிசையில்
இனி இந்தியாவை எழுதாமல்
கடக்க முடியாது
இஸ்ரோ விஞ்ஞானிகளின்
கைகளைத் தொட்டுக்
கண்களில் ஒற்றிக்கொள்கிறோம்
இது மானுட வெற்றி
அந்த நிலாவத்தான்
நாம கையில புடிச்சோம்
இந்த லோகத்துக்காக
இது போதாது
நிலா வெறும் துணைக்கோள்
நாம் வெற்றி பெற - ஒரு
விண்ணுலகமே இருக்கிறது" என பாடலாசிரியர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
பூமிக்கும் நிலவுக்கும்
— வைரமுத்து (@Vairamuthu) August 23, 2023
விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது
இந்தியா
ரஷ்யா அமெரிக்கா சீனா
என்ற வரிசையில்
இனி இந்தியாவை எழுதாமல்
கடக்க முடியாது
இஸ்ரோ விஞ்ஞானிகளின்
கைகளைத் தொட்டுக்
கண்களில் ஒற்றிக்கொள்கிறோம்
இது மானுட வெற்றி
அந்த நிலாவத்தான்
நாம கையில புடிச்சோம்
இந்த லோகத்துக்காக… pic.twitter.com/vtd5fqQKoz
An absolutely Momentous achievement for India !! #Chandrayaan3 🚀 registers an unprecedented and spectacular success!!! 👏👏👏
— Chiranjeevi Konidela (@KChiruTweets) August 23, 2023
History is Made today!! 👏👏👏
I join over a Billion proud Indians in celebrating and congratulating our Indian scientific community !!
This clearly… pic.twitter.com/tALCJWM0HU
“இந்தியாவுக்கு இது ஒரு மிக முக்கியமான சாதனை !! #சந்திராயன்3 யாரும் செய்யாத அற்புதமான வெற்றியைப் பதிவு செய்கிறது!!! வரலாறு படைக்கப்பட்டுள்ளது” என நடிகர் சிரஞ்சீவி பதிவிட்டுள்ளார்.
இறுதியாக மனிதகுலத்துக்கு நிலவின் தென் துருவம் திறந்துள்ளது. அனைத்து விஞ்ஞானிகள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், பணியாளர்களுக்கும் வாழ்த்துகள்” என நடிகர் மோகன்லால் வாழ்த்தியுள்ளார்.
And finally, the South Pole opens up for humankind!
— Mohanlal (@Mohanlal) August 23, 2023
Congratulations to every scientist, technician and staff member of @isro on getting #Chandrayaan3 to touch history at the Moon's South Pole! Here's to curiosity, persistence and innovation that have made a whole nation proud!… pic.twitter.com/PXx0vFvzGt
“வரலாறு படைக்கப்பட்டுள்ளது. என்ன ஒரு தருணம்.. பெருமையாக உள்ளது“ என நடிகர் அதர்வா பதிவிட்டுள்ளார்.
“ஜெய்ஹிந்த். இந்தியர்களாகிய நமக்கு இது போன்ற ஒரு மறக்க முடியாத நாள்!” என நடிகை சித்தி இத்னானி பதிவிட்டுள்ளார்.
“இந்தியா நிலவில் தரை இறங்கியது. விஞ்ஞானிகளின் முகத்தில் இருந்த சிரிப்பு என்னை நெகிழ வைத்தது” என நடிகர் ஹரீஷ் கல்யாண் பதிவிட்டுள்ளார்
“India has landed on the moon”. The smiles on the faces of the scientists gave me goosebumps.
— Harish Kalyan (@iamharishkalyan) August 23, 2023
Proud moment for us. 🇮🇳🫡#ISRO #Chandrayaan3 pic.twitter.com/hStDJ483TZ
“நம் நாட்டை எண்ணி பெருமைப்படுகிறேன். இதை சாத்தியமாக்கிய சம்பந்தப்பட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் நன்றியும் மரியாதையும்” என இசையமைப்பாளர் தமன் பதிவிட்டுள்ளார்.