பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரின் பெயரை வெளியிட்டதாக பிரபலங்கள் மீது வழக்குப் பதிவு!
நான்கு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்ட ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவரின் பெயரை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாக பிரபலங்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மருத்துவர் நான்கு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, உயிருடன் எரிக்கப்பட்ட கொடூர சம்பவம் ஹைதராபாத்தில் நிகழ்ந்தது. அந்த பயங்கரமான நினைவுகள் மக்களின் மனதில் இன்றும் மாறாத வடுவாக நிற்கிறது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரின் உண்மையான பெயரை சமூக வலை தளங்களில் வெளிப்படுத்தியதற்காக டோலிவுட் மற்றும் பாலிவுட்டைச் சேர்ந்த 38 திரைப்பட பிரபலங்களை கைது செய்யக் கோரி, டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார்.
அனுபம் கெர், ஃபர்ஹான் அக்தர், அஜய் தேவ்கன், அக்ஷய் குமார், சல்மான் கான், மகாராஜா ரவி தேஜா, ரகுல் ப்ரீத் சிங், அல்லு சிரிஷ், சார்மி கவுர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உண்மையான பெயரை குறிப்பிட்டு பதிவிட்ட பிரபலங்கள் 38 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் பெயரை எந்த பொது மேடையில் பயன்படுத்தக்கூடாது என்னும் நீதிமன்ற தீர்ப்புடன் நேரடி முரண்பாடாக இருப்பதால், இவர்களுக்கு எதிராக வழக்கு தொடர பட்டுள்ளது. இவர்களை உடனடியாக கைது செய்யும்படியாக இவ்வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் கவுரவ் குலாட்டி பிரபலங்கள் மீது ஐபிசி பிரிவு 228 ஏ இன் கீழ் சப்ஸி மண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், மேலும் இந்த பிரபலங்கள் இல்லை என்று கூறி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பொறுப்புள்ள குடிமக்களாக இருக்க தவறிய பட்சத்தில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரின் பெயரை வெளியிட சட்டங்கள் தடைசெய்திருந்தாலும் பிரபலங்கள் வெளியிட்டதாக குலாட்டி குற்றம் சாட்டினார். பாதிக்கப்பட்டவரின் பெயரை விளம்பரப்படுத்தாமல் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதற்குப் பதிலாக பிரபலங்கள் சமூக ஊடக தளங்களில் அவளுடைய உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்தி விதியை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்டவரின் தனியுரிமையைப் பேணும்போது அவர்கள் எந்த சமூகப் பொறுப்பையும் காட்டவில்லை என்று குற்றம் சாட்டி, மேற்கண்ட அனைத்து பிரபலங்களையும் உடனடியாக கைது செய்ய வழக்கறிஞர் கோரியுள்ளார். சமூக அநீதிக்கு எதிராக போராடும்போது அதில் சிறு சிறு கவனங்களும் வேண்டும் என்பதால் அவர் இந்த வழக்கை மிக உன்னிப்பாக நடத்தி வருகிறார்.
ஏற்கனவே, நடிகர்கள் ரவி தேஜா, சார்மி கவுர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் தற்போது 2017 ஆம் ஆண்டு போதை மருந்து வழக்கில் சிக்கலில் உள்ளனர். இப்போது, இந்த வழக்கில் அவர்கள் மற்றொரு சிக்கலில் சிக்கியுள்ளனர்.