மேலும் அறிய

Actor Dhanush: ‛‛தனுஷை இந்தி ஹீரோவாக்க நெனச்சாரு போனி கபூர்’’ இயக்குநர் சுப்ரமணியன் சிவா

அமிதாப்கூட 'ஷமிதாப்' படத்துல நடிச்சார். இதெல்லாம் இந்தியன் நடிகனா வெளியுலகத்துல இவருக்கு கவனத்தை ஏற்படுத்துச்சுனு சொல்லணும். தமிழ், இந்தி, ஹாலிவுட்னு தனுஷ் நடிச்சாலும் என்னுடைய வேலையை செய்றேன்னு மனநிலையில் தான் எப்போதும் இருப்பார்.

தனுஷ் நடிக்க வந்து 19 வருடங்கள் ஆன நிலையில் தனுஷ்யை கமர்ஷியல் ஹீரோவாக அறிமுகம் செய்த இயக்குநரும் தனுஷ் ரசிகர் மன்ற தலைவருமான சுப்ரமணிய சிவா தனுஷ் குறித்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். 

'' தனுஷ் நடிக்க வந்த புதுசுல நடிப்பு மேல பெரிய ஆர்வமில்லாம சூழல் காரணமாக 'துள்ளுவதோ இளமை' படத்தில் நடித்தார். இதனால, நடிப்பு பற்றிய பெரிய கனவு இருந்ததில்ல. 'துள்ளுவதோ இளமை' வந்தப்போ அந்த காலத்து இளைஞர்களுக்கு பிடித்த படமா அமைஞ்சிருச்சு. அப்போ,  தனுஷ் படமா யாரும் இதை பார்க்கல. ஆனா, பெரிய ட்ரெண்ட் செட் உருவாக்கின படம். இதுல எந்த மாற்று கருத்தும் இல்ல. ஏன்னா, இதுக்கு அப்புறம் நாற்பது படங்கள் இதே ஸ்டைல்ல பூஜை போட்டாங்க. ஆனா, எதுவும் சரியா வொர்க் ஆகல. எந்தவொரு பெர்ஷனாலிட்டி யும் இல்லாத சாதரணமா இருக்குற எந்தவொரு பையனும் நடிகனா வரலாம்னு தனுஷ் நிருப்பிச்சு காட்டுனார். இதுக்கு முன்னாடி இதை ரஜினி மற்றும் விஜயகாந்த் போன்ற ஹீரோஸ் பண்ணுனாங்க.  ஹீரோஸூக்குனு இருந்த பிம்பத்தை எல்லாம் உடைச்சிட்டு வெளியே வந்தவங்க இவங்க. சராசரியான ஆட்களும் நடிக்கலாம்னு முன்னுதாரணமா இருந்தவங்க இவங்கதான். பக்கத்து வீட்டு பையனும் நடிக்க வரலாம்னு தனுஷ் உணர்த்தினார். ''

Actor Dhanush: ‛‛தனுஷை இந்தி ஹீரோவாக்க நெனச்சாரு போனி கபூர்’’ இயக்குநர் சுப்ரமணியன் சிவா
'காதல் கொண்டேன்' தனுஷ் சிறந்த நடிகன்னு எல்லாரையும் உணர வெச்சது. இந்தப் படத்தோட ஷூட்டிங் எடுத்துக்கிட்டு இருந்தப்பதான் 'திருடா திருடி' படத்தோட ஷூட்டிங்யும் நடந்தது. சொல்லப்போனா மாத்தி மாத்தி நடத்தினோம். இதுல, 'திருடா திருடி' கமர்ஷியல் வடிவத்துல டான்ஸ், பைட்னு எல்லாம் தனுஷ் பண்ணுவார்னு உண்டு பண்ணுச்சு. இதுக்கு அப்புறம்  வந்த 'புதுப்பேட்டை' 'பொல்லாதவன்' 'ஆடுகளம்' மற்றும் 'அது ஒரு கனா காலம்'னு நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்குற படத்துல தனுஷ் நடிச்சு தன்னை நிருப்பீச்சு காட்டுனார்.

எப்போதுமே தனுஷூக்கு ஞாபகசக்தி அதிகமா இருக்கும். ஒரு டயாலக்ஸ் சீட்டு கொடுத்துட்டா உள்வாங்கிட்டு அழகா நடிச்சு கொடுத்திருவார். ஆரம்பத்துல நடிப்புல பெரிய ஆர்வம் இல்லாம இருந்தாலும் சரியான நேரத்துக்கு ஷூட்டிங் வந்திருவார். ஒரு தயாரிப்பாளர் கஷ்டப்படமா இருக்குறதுக்கு தேவையான எல்லா விஷயத்தையும் செஞ்சு கொடுத்திடுவார். இப்போவும் தன்னுடைய வேலையைதான் சரியா செய்யணும்னு நினைப்பாரே தவிர வேற எதையும் நினைக்க மாட்டார். ஒரு படம் ரிலீஸாகி வெற்றியடைஞ்சாலும் என்னோட வேலையை செஞ்சேன் இதுக்கான ரிலீஸ் கிடைச்சிருக்குனு கடந்து போயிருவார். இதை விட்டுட்டு எதையும் தலையில தூக்கி வெச்சிட்டு ஆடுற மனநிலையெல்லாம் தனுஷூக்கு கிடையாது. 

Actor Dhanush: ‛‛தனுஷை இந்தி ஹீரோவாக்க நெனச்சாரு போனி கபூர்’’ இயக்குநர் சுப்ரமணியன் சிவா
'காதல் கொண்டேன்' படத்தை இந்தில ரீமேக் பண்றதுக்கு போனி கபூர் ஆர்வமா இருந்தார். இங்கே இருந்து படத்தோட ரைட்ஸ் எல்லாம் வாங்கிட்டு போனார். செல்வராகவன் டைரக்‌ஷன் பண்ணி தனுஷே ஹீரோவா நடிக்குறதாகவும் இருந்தது. அப்போதே தனுஷ் இந்தில கவனிக்கப்பட்டார். 'ஆடுகளம்' படத்துக்கு பிறகு இந்தில 'ராஞ்சனா' படத்துல நடிக்க கமிட்டானார். இது பெரிய கவனத்தை ஈர்த்தது. இதுக்கு அப்புறம் அமிதாப்கூட 'ஷமிதாப்' படத்துல நடிச்சார். இதெல்லாம் இந்தியன் நடிகனா வெளியுலகத்துல இவருக்கு கவனத்தை ஏற்படுத்துச்சுனு சொல்லணும். தமிழ், இந்தி, ஹாலிவுட்னு தனுஷ் நடிச்சாலும் என்னுடைய வேலையை செய்றேன்னு மனநிலையில்தான் எப்போதும் இருப்பார். ஹாலிவுட்ல நடிச்சிட்டு இருக்கேன்னு எப்போதும் தன்னுடைய மனநிலையை மாற்றிக் கொள்ளாத நடிகன் தனுஷ். 

எப்போவும் 'சூப்பர் ஸ்டார்' மருமகன் எனும் அடையாளத்தை தனக்குள்ள வெச்சிக்க மாட்டார். தனக்கான தனி அடையாளத்தோட வரணும்னு நினைச்சுதான் இப்போ இந்த உயரத்துல இருக்கார். இதை தாண்டி எதையும் யோசிச்சது இல்ல. குடும்பத்தோட சொந்தத்தை தொழிலையும் எப்போவும் தொடர்பு படுத்தி பார்த்துக்க மாட்டார். ஆனா, ரஜினி சார் மேல மிகப்பெரிய மரியாதை வெச்சிருக்கார். தனுஷ் ஆன்மிகத்துல பெரிய நம்பிக்கை வெச்சிருக்குறதுக்கு ரஜினி சார் காரணமா இருப்பார்னு நினைக்குறேன். எவ்வளவு உயரத்துக்கு போனாலும் ரஜினி சார் மாதிரியே பெரிய பண்புடையவர் தான் தனுஷூம். பெரிய கூச்சம் சுபாவம் உடையவர்தான் தனுஷ். ஆனா, எந்த இடத்துக்கு வளர்ந்தாலும் இது தொழில் நமக்கு கொடுத்தது. இதை சராசரி வாழ்க்கையோட  ஒப்பிட்டு பார்க்க கூடாதுனு நினைச்சிட்டு இருக்குறவன்தான் தனுஷ். 

Actor Dhanush: ‛‛தனுஷை இந்தி ஹீரோவாக்க நெனச்சாரு போனி கபூர்’’ இயக்குநர் சுப்ரமணியன் சிவா
தனிப்பட்ட முறையில் தனுஷ் ஸ்டார் மற்றும் ஆர்டிஸ்ட் ரெண்டாவும் இருப்பார். இது தனுஷூக்கு கைவந்த கலை. இதை மக்களும் ஏத்துக்கிட்டாங்க. அதே மாதிரி எப்போதும் நடிப்புக்குனு பெரிய ஹார்ட் வொர்க் பண்ற பெர்ஷன் தனுஷ் இல்ல. நிறைய வாசிப்பு பழக்கம் தனுஷூக்கு இருக்கு. தமிழ் மற்றும் ஆங்கிலம்னு எல்லா புத்தகமும் படிப்பார். வாசிப்பு பழக்கம் இருக்குறதுனால கேரக்டரை உள்ள வாங்கிட்டு நடிக்க கூடியவர் தான் தனுஷ். '' என்ற சுப்ரமணிய சிவாவிடம் ,தனுஷின் ரசிகர் மன்ற தலைவராக இருக்குறளவுக்கு தனுஷ் பிடிக்குமானு கேட்டா, 

Actor Dhanush: ‛‛தனுஷை இந்தி ஹீரோவாக்க நெனச்சாரு போனி கபூர்’’ இயக்குநர் சுப்ரமணியன் சிவா

2002 வருஷத்துல இருந்தே தனுஷை கவனிச்சிட்டு வரேன். அப்போவும் இப்போவும் ஒரே மாதிரியேதான் ரசிகர்கள்கிட்ட இருக்கார். சொல்லப்போனா ரசிகர் மன்றத்துல பதினைஞ்சு இலட்சம் பேர் உறுப்பினராகவும் அஞ்சு இலட்சம் வரைக்கும் உறுப்பினரா இல்லாதவங்களும் இருக்காங்க. நிறைய சகோதர் சகோதரிகளும் இருக்காங்க. இவங்களை சரியான முறையில கட்டயமைச்சிட்டு இருக்கேன்.  பல இக்கட்டான காலத்தை தாண்டி தான் வந்துட்டு இருக்கோம். இதோ கொரோனா காலத்துல உதவிகள் பண்றதுக்கும். இந்த காலகட்டத்துல ரசிகர் மன்ற தொடர்பான கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம்னு  சொல்லவும்தான் இருக்கேன். அரசாங்கம் பேனர்ஸ் எதுவும் வைக்க வேண்டாம்னு சொல்றப்போ இது மாதிரியான செயல்களில் ஈடுபட வேண்டாம்னு அறிவுறுத்தவும் கட்டுகோப்ப வைக்கவும்தான் ஒரு சீனியரா ரசிகர் மன்ற தலைவரா இருக்கேன். இதை பொறுப்பாதான் பார்த்துட்டு வர்றேன்,’’ என பொறுப்புடன் நிறைவு செய்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே!  ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Rishabh Pant: டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
Embed widget