(Source: ECI/ABP News/ABP Majha)
Boney Kapoor: அஜித் பட தயாரிப்பாளரிடம் அபேஸ் செய்த ஆன்லைன் கும்பல்.. போலீஸில் புகார்.. சுருட்டிய பணம் எவ்வளவு தெரியுமா..?
பிரபல தயாரிப்பாளரான போனிகபூரிடம் ஆன்லைன் மூலமாக பண மோசடி நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தயாரிப்பாளரான போனிகபூரிடம் ஆன்லைன் மூலமாக பண மோசடி நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் நேர்கொண்ட பார்வை, வலிமை, நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட படங்களை தயாரித்தவரும், பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூரிடம் ஆன்லைன் மூலமாக பண மோசடி நடந்துள்ளது. போனிகபூரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி மர்மநபர்கள் பொருட்களை வாங்கியிருக்கிறனர்.
View this post on Instagram
நடந்தது என்ன?
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிரெடிட் கார்டு வழங்கியிருந்த வங்கியில் இருந்து போனிகபூருக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய வங்கி ஊழியர் கிரெடிட் கார்டின் பில் இன்னும் கட்டப்படாமல் இருப்பதாக கூறியிருக்கிறார். இதனையடுத்து கிரெடிட் கார்டை சோதனை செய்த போது கிரெடிட் கார்டு சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து வங்கியில் விசாரித்து விவரங்களை வாங்கி பார்த்த போது, ரூ 3. 84 லட்சம் அளவிலான பணம் கிரெடிட் கார்டிலிருந்து செலவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. மொத்தமாக ஐந்து பரிவர்த்தனைகளில் இந்த மோசடி நிகழ்ந்துள்ளது.
View this post on Instagram
போலீசில் புகார்
இது குறித்து போனிகபூரின் உதவியாளரான மும்பையில் உள்ள அந்தேரி அம்போலி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தப்புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், “மோசடியில் ஈடுபட்டவர்கள் வங்கியில் இருந்து போன்று இமெயில் அல்லது மெசேஜ்யை அனுப்பில் கிரெடிட் கார்டின் பின் நம்பரை பெற்றிருக்க வேண்டும். அப்படியிலலையென்றால் கிரெடிட் கார்டு பின் நம்பரை ஸ்கிம்மர் கருவிகளை பயன்படுத்தி திருடியிருக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.