Dhanush Helps Bonda Mani: சிகிச்சைக்கு பணம் அனுப்பிய தனுஷ்..எமோஷனல் ஆகி வீடியோ வெளியிட்ட போண்டாமணி!
Actor Dhanush Helped Bonda Mani: நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு நடிகர் தனுஷ் பணம் கொடுத்து உதவி இருக்கிறார்.
நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு நடிகர் தனுஷ்(Dhanush) பணம் கொடுத்து உதவி இருக்கிறார்.
இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான பாக்யராஜின் பவுனு பவுனுதான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 1994 ஆம் ஆண்டில் வெளியான தென்றல் வரும் தெரு படம் போண்டா மணிக்கு திருப்புமுனையாக அமைந்தது.தொடர்ந்து கவுண்டமணி, வடிவேலு, விவேக்குடன் இணைந்த அவர், நான் பெத்த மகனே, சுந்தரா டிராவல்ஸ், அன்பு, திருமலை, ஐயா, ஆயுதம், வின்னர், வேலாயுதம், படிக்காதவன், மருதமலை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை காட்சிகளில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
View this post on Instagram
இவர் தற்போது இரண்டு கிட்னிகளும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்த தகவலை நடிகர் பெஞ்சமின் வீடியோவாக வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து போண்டா மணியை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரின் மருத்துவ செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் முருகன் கோயிலில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் வடிவேலு, போண்டா மணிக்கு தன்னால் இயன்ற உதவியை செய்யவுள்ளதாக தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து நடிகர் விஜய்சேதுபதி அவருக்கு 1 லட்சம் கொடுத்து உதவினார். இந்த உதவிக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட போண்டா மணி, “ அன்பு அண்ணன் நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் கிங்காங்கிடம் நம்பர் வாங்கி ரூ.1 லட்சம் என் பேங்க் அக்கவுண்ட்ல போட்டு விட்டுருக்காரு. அந்த ஒரு லட்சம் ஒரு கோடிக்கு சமம் என்றார். மேலும் வடிவேலு செய்த உதவியை குறிப்பிட்ட அவர், திருச்செந்தூர்ல வடிவேல் சார் என்னை பத்தி பேசிருக்காரு. அதுவே பாதி உடம்பு சரியான மாதிரி இருக்குது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் வந்து தமிழக அரசு முழு சப்போர்ட் கொடுக்கும் என சொன்னது புத்துணர்ச்சியா இருந்தது.” என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் பிரபல நடிகரான தனுஷ் போண்டா மணிக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவி இருக்கிறார். இதனையடுத்து தனுஷ் செய்த உதவிக்கு நன்றி கூறி அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், “ வணக்கம் தம்பி தனுஷ், நீங்கள் கொடுத்த 1 லட்சம் ரூபாய் எனக்கு வந்து சேர்ந்தது. ரொம்ப சந்தோஷம். எனது சார்பிலும் என்னுடைய குடும்பத்தினர் சார்பிலும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்தப்பணம் இந்த நேரத்தில் பெரிய உதவியா இருக்கு. இந்த சூழ்நிலையில் நீங்கள் இப்படியெல்லாம் உதவி பண்றது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு." என்று பேசியிருக்கிறார்.