மேலும் அறிய

Bommakka Song : பொன்னி நதி பாட்டு பிடிக்குமா..?அப்போ இளங்கோ கிருஷ்ணன் எழுதுன இந்த பாட்ட கேளுங்க

சமுத்திரகனி நடித்துள்ள திரு மாணிக்கும் திரைப்படத்தின் பொம்மக்கா பாடல் சில நாட்கள் முன்பு வெளியாகி தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது

சமுத்திரகனி நடித்துள்ள திரு மாணிக்கம்

நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரகனி நடித்துள்ள படம் திரு மாணிக்கம். நாடோடிகள் , எங்கேயும் எப்போதும் படங்களில் நடித்த அனன்யா இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். பாரதி ராஜா , நாசர் , தம்பி ராமையா , இளவரசு போன்ற மூத்த நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். சீதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பொன்னியில் செல்வன் படத்தின் பாடல்வரிகளை எழுதிய கவிஞ்ர் இளங்கோ கிருஷ்ணன் இந்த படத்தில் பாடல்களை எழுதியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகி கவனமீர்த்தது. குறிப்பாக " தவறெனில் வலியதும் வீழும், சரியெனில் எளியதும் வாழும்" என்கிற வரி அதிக கவனமீர்த்துள்ளது. டீசர் பார்ப்பதற்கு கமலின் பாபநாசம் படம் மாதிரியான ஒரு கதைக்களமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 

பொம்மக்கா பாடல்

திரு மாணிக்கம் படத்தின் 'பொம்மக்கா' பாடல் சில நாட்கள் முன்பு வெளியாகியது. கணவன் மனைவி இரு மகள்கள் என ஒரு சின்ன குடும்பத்தின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இந்த பாடலின் வரிகள் அமைந்துள்ளன. உணர்வுகளை சின்ன சின்ன உயிரினங்களின் வாழ்க்கயோடு தொடர்புபடுத்திய பாடலாசிரியரின் கற்பனை அழகாக இருக்கிறது.

இசையைப் பொறுத்தவரை நல்ல ஒரு கும்மிப்பாட்டு போல கிராமியத் தன்மையில் அமைந்திருக்கிறது. ஆனால் இரண்டாம் உலகப்போர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த மன்னவனே பாடலின் நேரடி தாக்கத்தை இப்பாடலில் பார்க்க முடிகிறது. குறிப்பாக சரணத்தில் .

பொம்மக்கா பாடல்வரிகள் கீழே :

ஹூக்:

கைவீசு பொம்மக்கா ஏ பொம்மக்கா
கைவீசு பொம்மக்கா ஏ பொம்மக்கா

தொகையறா: 

பொம்மக்கா பொம்மக்கா 
எங்க போற பொம்மக்கா
கூடவே நானும் வரட்டா

பொம்மக்கா பொம்மக்கா
ராட்டினத்தில் ஏறுக்கா
ஊரைச் சுத்திக் காட்டப்போறேகா

பல்லவி:

செங்காட்டு தோப்புல
செவலைக் குருவி கூட்டுல
கும்மாளம் இன்னும் தீரல

வங்காட்டு மூலையில
வாலைக் குருவி கூத்துல
கொண்டாட்டம் கூடுதே புள்ள

இந்த வானவில்லை எடுத்து
ஊஞ்சல் ஒண்ணு தரிச்சு
சின்னஞ் சிறு தேவதைகள்
ஆடட்டுமே

அந்த மேகத்தையே எடுத்து
பஞ்சு மெத்த தரிச்சு
செஞ்சு வையி சாமிகளும் 
உறங்கட்டுமே

அனுபல்லவி:

அப்பன் முகத்துல கோபம் இல்ல
மனசுல கள்ளமில்ல வரமா தருவாண்டி

அம்மை விழியில நீருமில்ல 
நினைவில சேருமில்ல
வரமே அவதாண்டி

ஹூக்:

கைவீசு பொம்மக்கா ஏ பொம்மக்கா
கைவீசு பொம்மக்கா ஏ பொம்மக்கா

சரணம்:

வெண்டக்காய் கம்மலை வெட்டித்தாரன் போட்டுக்கோ
விளையாட்டு கத்தி செஞ்சு செல்ல சண்டை போட்டுக்கோ
வெள்ளி நிலவை  இங்க அழைப்போமா
துள்ளிக் குதிச்சு பந்து அடிப்போமா

ஹூக்:

கைவீசு பொம்மக்கா ஏ பொம்மக்கா
கைவீசு பொம்மக்கா ஏ பொம்மக்கா

அப்பனின் முதுகில் யானை வண்டி ஏறிக்கோ
அன்னையின் கைகளில் தட்டாமாலை சுத்திக்கோ
ஆத்தங்கரையில் ஒரு மீனைப்பிடிப்போம்
தண்ணிக்குள்ளயே அதை விட்டுவிடுவோம்

தேவதை மண்ணில் வந்து
வாழுகின்ற வீடு இது
ஆனந்தம் என்றுமே குறையாதே

தேனீக்கள் கூட்டுக்குள்ளே
ரீங்காரம் என்றும் உண்டு
ராகங்கள் பாடுமே நிறுத்தாதே

அனுபல்லவி:

அப்பன் முகத்துல கோபம் இல்ல
மனசுல கள்ளமில்ல வரமா தருவாண்டி

அம்மை விழியில நீருமில்ல 
நினைவில சேருமில்ல
வரமே அவதாண்டி

ஹூக்:

கைவீசு பொம்மக்கா ஏ பொம்மக்கா
கைவீசு பொம்மக்கா ஏ பொம்மக்கா

தலைப்பு செய்திகள்

இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget