அமர்ந்தபடியே பாவனை செய்யும் வீடியோ.. நடன தின வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ள ஜான்வி கபூர்!
சமீபத்தில், சர்வதேச நடன தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, அமர்ந்தபடியே பாவனைகளை மேற்கொள்ளும் நடன வீடியோ ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஜான்வி கபூர்.
![அமர்ந்தபடியே பாவனை செய்யும் வீடியோ.. நடன தின வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ள ஜான்வி கபூர்! Bollywood actress Jhanvi Kapoor shares a video of her dance on International Dance Day அமர்ந்தபடியே பாவனை செய்யும் வீடியோ.. நடன தின வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ள ஜான்வி கபூர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/01/baaa460818cb656e07692e862fef3a0d_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாலிவுட் திரைப்படங்களில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ஜான்வி கபூர், மறைந்த நடிகை ஸ்ரீதேவி, பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோரின் மகளான ஜான்வி கபூர் எப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது படங்களையோ, வீடியோவையோ பகிர்ந்தாலும் அவரது ரசிகர்கள் அவரைக் கொண்டாடுவது வழக்கம்.
இந்நிலையில் சமீபத்தில், சர்வதேச நடன தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, அமர்ந்தபடியே பாவனைகளை மேற்கொள்ளும் நடன வீடியோ ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஜான்வி கபூர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த வீடியோ எனக் குறிப்பிட்டுள்ள அவர், பிரபல பாலிவுட் நடிகை ரேகா நடனம் ஆடிய கிளாசிக் இந்திப் பாடலான `இன் ஆங்கோ கீ மஸ்தி’ பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.
தனது பதிவில், நடிகை ஜான்வி கபூர், `இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த வீடியோ.. அமரும் பாவனையில் நடனம் ஆடும் எனது முதல்கட்ட முயற்சிகளுள் எடுக்கப்பட்ட வீடியோ.. இரண்டு தினங்கள் தாமதமாக சொல்கிறேன் என்றாலும், அனைவருக்கும் சர்வதேச நடன தின வாழ்த்துகள்!’ எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவிற்கு நடிகர்கள் ஷனாயா கபூர், சான்யா மல்ஹோத்ரா முதலானோர் கமெண்ட்களில் நடிகை ஜான்வி கபூரைப் பாராட்டியுள்ளனர்.
View this post on Instagram
தற்போது பல்வேறு புதிய படைப்புகளில் பிஸியாக நடித்து வருகிறார் ஜான்வி கபூர். நடிகர் ராஜ்குமார் ராவுக்கு ஜோடியாக, `மிஸ்டர் அண்ட் மிஸஸ் மாஹி’ படத்திலும் அவர் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் டீசர் வெளியாகி, பலரின் எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது. அடுத்ததாக, `குட் லக் ஜெர்ரி’, `மிலி’ முதலான திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஜான்வி கபூர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)