மேலும் அறிய

Thalapathy Vijay: விஜய் திரும்ப சினிமாவில் நடிப்பார்.. வம்புக்கு இழுத்து கலாய்க்கும் ப்ளூ சட்டை மாறன்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய்கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியைத் தொடங்குவதாக தெரிவித்தார்.

நடிகர் விஜய் சினிமாவில் மீண்டும் நடிப்பார் என சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “லியோ” படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் “the greatest of all time" என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படியான நிலையில் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியைத் தொடங்குவதாக தெரிவித்தார். நீண்ட நாட்களாக அவர் அரசியலுக்கு வருவார் என சொல்லப்பட்ட நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக விஜய் அரசியல் வருகை குறித்து அறிவித்தார். 

 முழு நேர மக்கள் பணியாற்றி விரும்புவதாகவும், தன்னுடைய 69வது படத்துடன் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாகவும் கட்சி தொடர்பான அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். மேலும் 2026 ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு எனவும் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து விஜய்யின் அரசியல் வருகைக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் கட்சியினர் இடையே ஆதரவும் எதிர்ப்பும் கிடைத்து வருகிறது. 

விஜய் மக்கள் இயக்கத்தினரும், ரசிகர்களும் அடுத்த முதலமைச்சர் விஜய் தான் என அடித்து சொல்கின்றனர். கட்சி பணிகளும் களைக்கட்டத் தொடங்கியுள்ளது. நேற்று சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில்  தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் தமிழக வெற்றிக் கழகத்தால் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வரும் சிறப்புச் செயலி வாயிலாக உறுப்பினர் சேர்க்கை முகாம்களை மாவட்ட, மாநகர, நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி, வார்டு வாரியாக முழுவீச்சில் நடத்தி, புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இப்படியான நேரத்தில் தமிழ் சினிமாவில் இனி விஜய் நடிக்க மாட்டார் என்றால் அவரின் இடத்தைப் பிடிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

அதில் பலரும் நடிகர் சிவகார்த்திகேயன் தான் தமிழ் சினிமாவின் அடுத்த தளபதி என கருத்து தெரிவித்துள்ளனர். இதனிடையே விஜய் நிச்சயம் அரசியலில் இறக்கம் கண்டு சினிமாவுக்குள் திரும்பி விடுவார் என சிலர் கூறுகிறன்றனர். இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், மீம் ஒன்றை எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “விஜய் அரசியலுக்கு வந்துட்டாரு..இனிமே சினிமாவுல அவர் இடத்தை யார் நிரப்புவா? என்ற கேள்வியும், “ரெண்டு வருஷம் கழிச்சி அவரே வந்து நிரப்புவாரு. போய் வேற வேலை இருந்தா பாருங்கடா” என்ற பதிலும் இடம் பெற்றுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்துவிட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்துவிட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar | Arvind Kejriwal Master Plan | ”டெல்லிக்கு கிளம்புங்க உதய்”பறந்து வந்த அழைப்பு..Rahul Gandhi Marriage | ராகுலுக்கு டும்..டும்..டும்..அக்கா பிரியங்கா ஹேப்பி!  MARRIAGE UPDATEVaaname Ellai | மாறும் LIFESTYLE : PHYSIOTHERAPHY படிப்புக்கு பெருகும் வேலைவாய்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்துவிட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்துவிட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Embed widget