மேலும் அறிய
Advertisement
Blue Sattai Maran on Furiosa: இன்று வெளியான படத்தை பாராட்டித் தள்ளிய ப்ளூ சட்டை மாறன்.. இணையவாசிகள் ஷாக்!
Blue Sattai Maran on Furiosa : 'ஃபியூரியோஸா' படத்தை புகழ்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை வழங்கியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
பாலிவுட் திரையுலகின் மிகவும் திறமையான இயக்குநர்களில் ஒருவரான ஜார்ஜ் மில்லர், வியக்கத்தக்க வகையில் மேட் மேக்ஸ் படங்களை இயக்கியதன் மூலம் உலகெங்கிலும் பிரபலமானவர். முதன் முதலாக 1979ம் ஆண்டு வெளியான மேட் மேக்ஸ் படம் மூலம் தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். அதைத் தொடர்ந்து 1981ம் ஆண்டு அதன் பார்ட் 2 மற்றும் 1985ம் ஆண்டு மேட் மேக்ஸ் : பியோண்ட் தி தண்டர் ஸ்டார்ம் படத்தை இயக்கி இருந்தார்.
அந்த வரிசையில் 2015ஆம் ஆண்டு அவர் இயக்கிய ‘மேட் மேக்ஸ் ஃபியூரி ரோடு’ படம் எக்கச்சக்கமான ஆஸ்கர் விருதுகளை குவித்தது. அதன் தொடர்ச்சியாக 2024ஆம் ஆண்டு அவர் இயக்கியுள்ள திரைப்படம் ஃபியூரியோஸா : மேட் மேக்ஸ் சாகா’. இன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். நேர்மையான விமர்சனங்களை இப்படம் அள்ளிக் குவித்து வருகிறது. ஃபியூரியோஸா. இந்த ஆண்டின் மிகச்சிறந்த ஒரு ஆக்ஷன் படமாக இது அமைந்துள்ளது என்பது தான் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் விமர்சனமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் எந்தப் படமாக இருந்தாலும் தன்னுடைய சரமாரியான விமர்சனங்களால் தாக்கும் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ஒரு படத்தைப் பாராட்டி விமர்சனம் கொடுப்பது என்பது அரிதான ஒன்று. அப்படிப்பட்ட ப்ளூ சட்டை மாறன் 'ஃபியூரியோஸா : மேட் மேக்ஸ் சாகா' படத்தை புகழ்ந்து தள்ளி விமர்சனம் கொடுத்துள்ளார் என்பது ஆச்சரியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. கமர்ஷியல் படங்கள் என்றாலே அது எந்த மொழிப் படமாக இருந்தாலும் அதைப் படுமோசமாக விமர்சனம் செய்வதை வாடிக்கையாகக் கொண்ட ப்ளூ சட்டை மாறனுக்கு ஹாலிவுட் படங்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல. எந்த அளவுக்கு தமிழ் படங்களை தாக்குகிறாரோ அதே போல தான் ஹாலிவுட் படங்களுக்கும் விமர்சனம் கொடுத்து வருகிறார்.
அப்படிப்பட்ட ப்ளூ சட்டை மாறன் ஃபியூரியோஸா படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களைக் கொடுத்துள்ளார். எத்தனை கோடி கொட்டி படம் எடுத்தாலும் கடைசி வரையில் ரசிகர்களை கட்டிப்போடும் வகையில் ஒரு படத்தை வழங்க முடியுமா என்பதை சாதித்து காட்டியுள்ளார் ஜார்ஜ் மில்லர் என ப்ளூ சட்டை மாறன் பாராட்டியுள்ளார்.
சமீப காலமாகவே ஹாலிவுட் படங்களும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற தவறி வருகின்றன. பல கோடி பட்ஜெட் படங்கள் கூட குப்பை படங்களாக தான் இருந்து வந்தன. இதில் ஓப்பன்ஹெய்மர் உள்ளிட்ட ஒரு சில படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. தரமான ஹாலிவுட் படத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு ஜார்ஜ் மில்லரின் 'ஃபியூரியோஸா' படம் ஒரு விருந்தாக அமைந்துள்ளது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion