Blake Lively: நான்காவது முறை தாயான ப்ளேக் லைவ்லி…மகிழ்ச்சியில் திளைக்கும் ரயான் ரெனால்ட்ஸ்!
ஹாலிவுட்டின் ப்ளேக் லைவ்லி-ரயான் ரெனால்ட்ஸ் சூப்பர் ஜோடிக்கு நான்காவது குழந்தை பிறக்கவுள்ளது.

பவர் கப்புள் லைவ்லி-ரயான்:
‘காசிப் கேர்ள்’ என்ற தொடர் மூலம் அனைவருக்கும் பரீட்சியமான முகமானார் ப்ளேக் லைவ்லீ.அது மட்டுமன்றி, தி ஏஜ் ஆஃப் ஆடலின், சேவேஜஸ், தி ஸ்வாலோஸ் உள்ளிட்ட படங்களிலும் நடித்து பிரபலமானார். சமீபத்தில் கூட, அமெரிக்க பாப்-பாடகி டெய்லர் ஸ்விஃப்டின் ‘ரெட்’ என்ற ஆல்பத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பாராட்டு பெற்றார். இவரது கணவர் ரயான் ரெனால்ட்ஸ். ஆடம் ப்ராஜெக்ட், 6 அன்டர்க்ரவுண்ட், ரெட் நோட்டிஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஹீரோவாக நடித்து வெளியான டெட்பூல் திரைப்படத்திற்கு இந்திய அளவில் ரசிகர்கள் அதிகம் பேர் உண்டு. க்ரீம் லேண்டர்ன் என்ற படம் மூலம் ஜோடி சேர்ந்த இவர்கள், நிஜ வாழ்க்கையிலும் காதலிக்க ஆரம்பித்தனர்.
View this post on Instagram
அதன் பிறகு 2012-ஆம் ஆண்டில் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தனர். இவர்களுக்கு ஜேம்ஸ், ஐனஸ் மற்றும் பெட்டி என்ற மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவர்களுக்கு நான்காவதாக குழந்தை பிறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View this post on Instagram
மீண்டும் பெற்றோர்கள் ஆகும் ஜோடி:
இயல்பாகவே நகைச்சுவை உணர்வை உடையவர் ரயான் ரெனால்ட்ஸ். எங்கு சென்றாலும், தனது மனைவியை வைத்து ஜோக் செய்வது இவருடைய வழக்கம். இவரது மனைவி ப்ளேக்கும், ரயானுக்கு ஏற்றார் போல கலாய்த்து தள்ளுவார்.
இதனால் இவர்கள் ஹாலிவுட்டின் 'பவர்-கப்புள்' என்றே அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தற்போது தங்களது நான்காவது குழந்தைக்கு தயாராகியுள்ளனர். இந்த தகவலை ஹாலிவுட் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். மீண்டும் பெற்றோர்களாகவுள்ள ப்ளேக்-ரயான் ஜோடிக்கு அவர்களது நண்பர்களும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

