Annamalai Biopic : அண்ணாமலை பயோபிக் குறித்து பரவும் அதிரடி தகவல்... இவர் தான் ஹீரோவா? ஹாட் டாபிக் இதுதான்
Annamalai Biopic : பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளது என்றும் அதில் நடிக்கும் ஹீரோ யார் என்ற தகவலும் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்திய சினிமாவில் பல்வேறு காலகட்டத்திலும் பிரபலமாக இருந்த பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாவது காலம் காலமாக நடக்கும் ஒன்றும் தான். அதிலும் சமீபத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற அதிரவைக்கும் உண்மை சம்பவங்களை திரைக்கதை பாணியில் படமாக்குவது என்பது இன்றைய ட்ரெண்ட்.
அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், தேச தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலரின் வாழ்க்கை வரலாறும் படமாக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் காமராஜர், பழம்பெரும் நடிகை சாவித்திரி, முன்னாள் ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி, பழம்பெரும் நடிகர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலரின் வாழ்க்கை வரலாறு காவியங்களாக உருவாகி மக்களின் கவனம் பெற்றுள்ளது. இது தவிர இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக் படமாக உருவாக உள்ளது என்ற பேச்சுக்கள் அடிபடுகின்றன.
அண்ணாமலை பயோபிக் :
அந்த வரிசையில் தினந்தோறும் தலைப்பு செய்திகளில் இடம் பெறும் மிக முக்கியமான புள்ளியாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர் அண்ணாமலைவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளது என்ற தகவல் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அவரை பற்றி பலரும் அறிந்த ஒரு விஷயம் அவர் அரசியலில் இறங்குவதற்கு முன்னர் கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றியவர் என்பது தான்.
ஐ.பி.எஸ் அதிகாரி டூ அரசியல் தலைவர் :
ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாக நாட்டுக்கு சேவை சேந்து வந்தவர் ஏன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் இறங்க வேண்டும்? அவரின் குடும்ப சூழல் என்ன? அவர் எப்படி ஐ.பி.எஸ் அதிகாரியாக ஆனார்? அரசியலில் எப்படி நுழைந்தார்? இப்படி பல கேள்விகளுக்கும் விடையாக இந்த பயோபிக் படம் அமையவுள்ளது என கூறப்படுகிறது.
யார் அந்த நடிகர் ?
அடுத்ததாக அண்ணாமலை வாழ்க்கை வரலாற்றில் அவரின் கதாபாத்திரத்தில் எந்த நடிகர் நடிக்க உள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த கேரக்டரில் நடிகர் விஷால் நடிக்க கூடும் என்ற பேச்சுக்கள் அடிபடுகின்றன. அதற்கு காரணம் நடிகர் விஷாலுக்கும் ஏற்கனவே கசப்பான அரசியல் அனுபவம் உள்ளது. இடைத்தேர்தலில் போது ஆர்.கே. நகர் தொகுதியில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இருப்பினும் 2026 சட்டமன்ற தேர்தலில் நான் மீண்டும் போட்டியிடுவேன் என அவரின் அரசியல் ஆசையை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல பல மேடைகளிலும் நடிகர் விஷால் ஐ.பி.எஸ் பற்றி பேசியுள்ளது அவரின் இந்த பிளான் பற்றி தான் இருக்குமோ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அண்ணாமலை பயோபிக் படத்தில் நடிகர் விஷால் நடிப்பது தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தும் ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது.